பகல் இரவு டெஸ்ட் போட்டிகளுக்கு 'டிரையல்' பார்க்கிறது ஆஸ்திரேலியா
மெல்போர்ன்: பகல் இரவு டெஸ்ட் போட்டிகளுக்கான சோதனைப் போட்டியை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது.
அதாவது முதல் தர கிரிக்கெட் போட்டிகளை முதல் கட்டமாக பகலிரவுப் போட்டியாக அது நடத்தவுள்ளது.
இதற்காக அது 9வது சுற்று பூபா ஷெப்பீல்ட் ஷீல்ட் கோப்பைப் போட்டிகளை பகல் இரவுப் போட்டிகளாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாம்.

பிங்க் நிற பந்து
இந்தப் போட்டிகளில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும்.

வெற்றி பெற்றால் தொடரும்
இந்தப் போட்டிகள் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு முதல் தரப் போட்டிகளை பகல் இரவுப் போட்டிகளாக நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2015-16ல் முதல் பகலிரவு டெஸ்ட்
ஆஸ்திரேலியாவில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியானது 2015-16ல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கையில் உள்ளது
இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத் தலைவர் பீட்டர் சுதர்லேன்ட் கூறுகையில், எல்லாம் ரசிகர்களின் ஆதரவில்தான் உள்ளது. அவர்கள் வரவேற்றால் இதுதொடரும். இதற்கான பணிகள் நிறைய உள்ளன. ரசிகர்கள் வரவேற்பு கிடைத்தால் மகிழ்வோம் என்றார்.


Click it and Unblock the Notifications