இந்தியா வந்தது ஆஸி. கிரிக்கெட் அணி - பலத்த பாதுகாப்பு

இந்த அணியில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு சங்கனீர் விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியுடன் முன்னாள் இந்திய பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் எக்சலன்சி மையத்தின் இயக்குநருமான கிரேக் சேப்பலும் வந்துள்ளார்.
இவர் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க ஆலோசனைப் பயிற்சியாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக தற்போது கிரேக் சேப்பல் வந்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன. முதல் போட்டி அக்டோபர் 9ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.
நாளை முதல் ஆஸ்திரிலேய அணி பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க அணியுடன் ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடும்.
சைமண்ட்ஸ் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலமிழந்து விடவில்ைல என்று தெரிவித்த கிரேக் சேப்பல் ஆஸ்திரேலிய அணி வலுவாகவே உள்ளது. இது மிகச் சிறந்த அணி என்றார்.
ஆஸ்திரேலிய அணி விவரம் - ரிக்கி பான்டிங், மாத்யூ ஹைடன், டாக் போலிங்கர், ஸ்டுவர்ட் கிளார்க், மைக்கேல் கிளார்க், பிராட் ஹாடின், மைக்கேல் ஹூஸே, பில் ஜேக்கஸ், மிட்சல் ஜான்சன், சிமோன் காடிச், ஜேசன் கிரெஜா, பிரெட் லீ, பிரைஸ் மெக்கெய்ன், பீட்டர் சிட்டில், ஷான் வாட்சன்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications