Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று விருது வாங்கப் போகும் வீரர்கள் யார் யார் தெரியுமா?

டெல்லி: சர்வதேச அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படும் விளையாட்டு துறையைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்துவோருக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதும், தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளருக்கு துரோணாசாரியார் விருதும், விளையாட்டு துறைக்கு வாழ்நாள் சேவை செய்தவர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான விருதுகளை இன்று நடக்கும் விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.

Sports Day awards to be presented today


பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில், தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன். சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலக்கிய ஹர்மன்பிரீத் கவுர் உள்பட, 17 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.

பதக்கத்துடன், ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுடன், ரூ.7.5 லட்சம், துரோணாசாரியார், தயான்சந்த் மற்றும் அர்ஜூனா விருதுடன், ரூ 5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.

விருது பெறுவோர் பட்டியல்:

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது -

தேவேந்திர ஜாஜாரியா (பாரா தடகளம்)

சர்தார் சிங் (ஹாக்கி)

தயான்சந்த் விருது-

புபேந்திர சிங் (தடகளம்)

சையத் ஷாகித் ஹகீம் (கால்பந்து)

சுமராய் டீடே (ஹாக்கி)

துரோணாசாரியார் விருது

மறைந்த டாக்டர் ஆர். காந்தி (தடகளம்)

ஹீரா நந்த் கடாரியா (கபடி)

சி.எஸ்.எஸ்.வி. பிரசாத் (பாட்மின்டன்)

பிரிஜ் பூஷண் மொகந்தி (குத்துச்சண்டை)

பி.ஏ. ரபேல் (ஹாக்கி)

சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கி சுடுதல்)

ரோஷன் லால் (மல்யுத்தம்)

அர்ஜூனா விருது

வி.ஜே. சுரேகா (வில்வித்தை)

குஷ்பிர் கவுர் (தடகளம்)

அரோக்கிய ராஜிவ் (தடகளம்)

பிரசாந்தி சிங் (கூடைப்பந்து)

லைஷ்ராம் தேபேந்த்ரோ சிங் (குத்துச்சண்டை)

சதேஸ்வர் புஜாரா (கிரிக்கெட்)

ஹர்மன்பிரீத் கவுர் (கிரிக்கெட்)

ஒய்னம் பெம்பெம் தேவி (கால்பந்து)

எஸ்.எஸ்.பி., சவ்ராசியா (கோல்ப்)

எஸ்.வி. சுனில் (ஹாக்கி)

ஜஸ்விர் சிங் (கபடி)

பி..என். பிரகாஷ் (துப்பாக்கிச் சுடுதல்)

ஓ. அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்)

சாகேத் மைனேனி (டென்னிஸ்)

சத்யவிரத காடியான்(மல்யுத்தம்)

மாரியப்பன் (பாரா தடகளம்)

வருன் சிங் பட்டி (பாரா தடகளம்)
Story first published: Tuesday, August 29, 2017, 13:33 [IST]
Other articles published on Aug 29, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+