Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆமா..ஆமா எப்படி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவதுன்னு சொல்லி கொடுப்பாரு அசாருதீன்: வினோத் காம்ப்ளி

Azhar wants to 'coach youngsters how to fix' matches, says Kambli
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனை பயிற்சியாளராக நியமித்தால் மேட்ச் பிக்சிங்கில் எப்படி ஈடுபடுவது என்று இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பார் என்று கிண்டலடித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முகமது அசாரூதீனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கடுப்புடன் வினோத் காம்ப்ளி பதிவிட்டிருக்கிறார்.

அதில் ஏக்தா கபூர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பற்றி ஒரு படம் எடுக்க விரும்புகிறாராம். அந்த படத்துக்கு "Ali Baba mil gaya chalish choro se" என்றுதான் பெயர் வைக்கலாம்.

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதை குரோஞ்சி ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால் நமது முன்னாள் கேப்டன் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. அனேகமாக அவர் இளைஞர்களுக்கு எப்படி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவது என பயிற்சி கொடுக்க விரும்புகிறார் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு அசாருதீன் மீது அதிரடிப் புகாரைக் கூறியிருந்தா காம்ப்ளி. 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி அரை உறுதியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்ய அசாருதீன் முடிவெடுத்தது பற்றி சந்தேகம் எழுப்பியிருந்தார். அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Story first published: Tuesday, August 20, 2013, 17:53 [IST]
Other articles published on Aug 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+