உலக பள்ளி செஸ்: பெங்களூர் மாணவன் சாம்பியன்
பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த 9 வயது பள்ளி மாணவன், உலக பள்ளிக்கூட மாணவர்களுக்கான செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளார்.
பெங்களூரில் உள்ள டிரையோ உலகப் பள்ளியில் படித்து வரும் மாணவன் அர்ஜன் ரோஷிக் பாரத். இவர் 4வது உலக பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான செஸ் சாம்பியன் போட்டியில் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டார். இதில், அருண் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
அவருக்கு கேண்டிடேட் மாஸ்டர் என்ற பட்டமும் அளிக்கப்படுகிறது. இது வழக்கமாக கிராண்ட் மாஸ்டர்களுக்குத்தான் வழங்கப்படும். ஆனால் அருணின் சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு இந்தப் பட்டம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் சார்பில் அருண் தவிர அனிருத் பட், ஜெரோம் எபனேசர்ஆகியோரும் பங்கேற்றனர். 3 பேரும் இணைந்து ஒட்டுமொத்த அணி போட்டியிலும் வென்று தங்கப் பதக்கம் வென்றனர்.
இப்போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 4 தங்கம் உள்பட 11 பதக்கங்கள் கிடைத்தன. இதில் கர்நாடகத்தைச் ேசர்ந்த பிரனவ் ரெட்டி 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 8வது இடத்தையும், 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில், நிஹால் மஞ்சுநாத் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications