Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் மாபெரும் வெற்றி: அதிபர் ஹூ

Olympic
பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி மிகப் பெரும் வெற்றி அடைந்துள்ளது. அமைதி, நட்பு, வலிமை ஆகியவற்றை அது உறுதிப்படுத்தியுள்ளது என்று சீன அதிபர் ஹூ ஜின்டாவோ கூறியுள்ளார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவையொட்டி வெளிநாட்டுத் தலைவர்கள், சர்வதேச பிரதிநிதிகளுக்கு ஹூ ஜின்டாவோ விருந்தளித்துக் கெளரவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், சீன மக்கள் மற்றும் உலக மக்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இப்போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், ஒலிம்பிக் குடும்பத்தினர், உலகெங்கிலுமிருந்து வந்திருந்து வாலன்டியர்களாகப் பணியாற்றியோர் ஆகியோருக்கு இந்த பெருமை போய்ச் சேரும்.

கடந்த 16 நாட்களும் உலக மக்களுக்கு அருமையான அனுபவமாக இருந்திருக்கும். சீனாவில் விளையாட்டை மேம்படுத்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் உதவும்.

நாடுகளுக்கிைடயே நட்புறவையும், புரிந்து கொள்ளுதலையும் மேம்படுத்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் உதவும். சீன மக்களுக்கும், உலக மக்களுக்கிடையிலான நட்புறவையும் இது வலுப்படுத்தியுள்ளது.

சீன மக்களும், உலக மக்களும் இணைந்து நடத்திய இந்த ஒலிம்பிக் போட்டியால், சர்வதேச அளவில் கலாச்சாரப் பரிமாற்றம் சிறப்பாக நடந்துள்ளது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தொடக்கம் முதல் சீனத் தலைநகரில் கூடிய பல்வேறு நாட்டினரும், சர்வதேச ஒலிம்பிக் இயக்கத்தின் அழகை அனுபவித்து மகிழ்ந்துள்ளனர் என்றார் ஹூ ஜின்டாவோ.

--
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+