Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், வெள்ளி வென்ற ஜமைக்கா சகாக்கள்

Usain Bolt
லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார். உசேன் போல்ட்டின் சகாவான ஜமைக்கானவின் யோகன் பிளேக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பந்தயத்தில் கடந்த முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உசேன் போல்ட், உலக சாம்பியனும் உசேன் போல்ட்டின் சகாவுமான யோகன் பிளேக், அசபா பாவெல், அமெரிக்காவின் நட்சத்திர வீரரும் 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான ஜஸ்டின் காட்லின், டைசன் கே ஆகிய ஜாம்பவான்கள் 100 மீட்டர் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்ததால் பெரும் ஆவலை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியது. இதில் காட்லின், ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதற்காக 4 ஆண்டு தடை பெற்ற பின்னர் மீண்டும் களம் இறங்கியிருந்தார்.

உசேன் போல்ட்டைப் பொறுத்தவரையில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்தாலும் அவரால் இம்முறை பதக்கம் வெல்ல முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் ஜூலை மாதம் நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் சகாவான ஜமைக்கா வீரர் யோகன் பிளேக்கிடமும் உசேன் போல்ட் தோற்றிருந்தார். இதேபோல் தசைநார் காயத்தாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்த காரணங்களால் உசேன் போல்ட்டால் சாதிக்க முடியுமா? என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

நேற்றைய போட்டியின் போது தமது ஓட்டத்தை சற்று தாமதமாகவே தொடங்கினார் உசேன்போல்ட். மெல்ல மெல்ல சிறுத்தையாக சீறிப் பாய்ந்தார். சக வீரரான யோகன் பிளேக் உள்ளிட்டோரை முந்திச் சென்று 9.63 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் தங்கப் பதக்கம் பெறுவது இது 4-வது முறை. 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 100மீட்டர், 200மீட்டர்,, 4X100 மீட்டர் ரிலே ஆகிய பிரிவுகளில் தங்கத்தை அள்ளியவர் உசேன் போல்ட்.

நேற்றைய போட்டியில் உசேன் போல்ட்டின் சகாவான யோகன் பிளேக் வெள்ளிப் பதக்கத்தையும் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் வெண்கலத்தையும் வென்றனர்,

பிளேக்கால்தான் பதக்கம்

தாம் தங்கப் பதக்கம் வென்றது குறித்து கருத்து தெரிவித்த உசேன் போல்ட், தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சகாவான யோகன் பிளேக்கிடம் தோல்வியடைந்திருந்தேன். அந்த தோல்விகளே என் கண்களைத் திறந்தன. அதுதான் என் வெற்றிக்குக் காரணம் என்றார்.

தமது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த யோகன் பிளேக், உசேன் போல்ட்டுக்கு அடுத்ததாக உலகின் அதிவேக மனிதர் என்ற பட்டம் கிடைத்திருப்பது பெருமையாக கெளரவமாக இருக்கிறது என்றார்.

புதிய சாதனை

நேற்றைய போட்டியின் மூலம் ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைத்திருக்கிறார் உசேன் போல்ட். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் உசேன் போல்ட் 9.69 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்ததே ஒலிம்பிக் சாதனையாக இருந்தது. இப்போது 9.63 விநாடிகளில் இலக்கை கடந்து, தனது பழைய சாதனையை முறியடித்துள்ளார் போல்ட்.

Story first published: Tuesday, August 7, 2012, 10:04 [IST]
Other articles published on Aug 7, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+