வெல்லிங்டன்: ஐசிஎல் அமைப்பில் இணைந்ததை அடுத்து நியூசிலாந்து அணியில் வாய்ப்பை இழந்த ஷேன் பான்ட், தற்போது இலங்கை தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணி வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 2 டுவென்டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.
இத்தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் தொடருக்கான அணியில் பல மாதங்களாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த டேரல் டபி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
ஐசிஎல் போட்டிகளில் பங்கேற்பதை அடுத்து அணியில் விளையாட தடை விதிக்கப்பட்ட ஷேன் பான்ட், ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். கேப்டன் பொறுப்பு வழக்கம் போல் வெட்டோரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணி:
வெட்டோரி, கிரெக் கம்மிங், கிராண்ட் எலியட், டேனியல் பிளைன், மார்டின் குப்டீல், கிறிஸ் மார்டின், பிரன்டன் மெக்குலம், டிம் மெகின்டோஷ், லெய்ன் ஓ பிரையன், ஜேகப் ஓரம், ஜீதன் படேல், ஜெஸி ரைடர், ரோஸ் டெய்லர், டேரைல் டபி, ரீஸ் யங்.
ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 அணி:
வெட்டோரி, ஷேன் பான்ட், நெய்ல் ப்ரூம், இயான் பட்லர், கிராண்ட் எலியட், மார்டின் குப்டீல், ஹரத் ஹாப்கின்ஸ், பிரன்டன் மெக்குலம், நாதன் மெக்குலம், பீட்டர் மெக்லாசன், கைல் மில்ஸ், ஜேகப் ஓரம், ஜீதன் படேல், ஜெஸி ரைடர், ரோஸ் டெய்லர்.