Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையை கட்டிப் போட்டு கொள்ளை

Anna Chakvetadze
மாஸ்கோ: ரஷ்ய இளம் டென்னிஸ் வீராங்கனை அன்னா ஷெக்வடாசேவை கட்டிப் போட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

உலக மகளிர் டென்னிஸ் அரங்கில் 6வது இடத்தில் இருப்பவர் அன்னா ஷெக்வடாசே. கவர்ச்சிகரமான டென்னிஸ் வீராங்கனைகளின் வரிசையிலும் இடம் பெற்றிருப்பவர்.

இந் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை மாஸ்கோவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள ஷெக்வடாசேவின் வீட்டுக்குள் 6 திருடர்கள் புகுந்தனர்.

வீட்டில் ஷெக்வடாசேவன் தந்தை ஸமால், தாயார் மற்றும் 9 வயது தம்பி ஆகியோர் இருந்தனர். ெகாள்ளை குறித்து ஷெக்வடாசே கூறுகையில், திருடர்கள் என்னை தாக்கிவிட்டு எனது தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு விடுவேன் என மிரட்டினர்.

பின்னர் வீட்டில் உள்ள அனைத்தையும் தருமாறு மிரட்டினர். நான் அவர்கள் கூறியது போல செய்தேன். பின்னர் என்னையும், எனது குடும்பத்தில் உள்ளவர்களையும் கட்டிப் போட்டு விட்டு போய் விட்டனர் என்றார்.

1 லட்சம் டாலர் மதிப்புள்ள பொருட்களையும், ரொக்கப் பணத்தையும் அள்ளிச் சென்று விட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல டென்னிஸ் வீராங்கனையின் வீட்டில் நடந்த இந்த துணிகரத் திருட்டு விளையாட்டு ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:33 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+