Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று முதல் 'ஒரு நாள் விருந்து' ஆரம்பம்... சாப்பிட ரெடியா ரசிகர்களே...??

லண்டன்: ஐபிஎல் டுவென்டி20 கொடுத்த விருந்தே இன்னும் ரசிகர்களின் மனதிலிருந்து அகலவில்லை. இந்த நிலையில் நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் போட்டிகள் தொடங்குகின்றன.

ஐசிசி நடத்தி வரும் போட்டியே இந்த சாம்பியன்ஸ் டிராபிதொடர். மினி உலகக் கோப்பை என்றும் இதற்கு செல்லப் பெயர் உண்டு.

ஆனால் இதுதான் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடராகும். இந்தவருடத்தோடு இந்தப் போட்டிக்கு மூடு விழா காண்கிறது ஐசிசி.

இங்கிலாந்தில்

இங்கிலாந்தில்

இந்த ஆண்டு போட்டிகளை இங்கிலாந்து நடத்துகிறது. நாளை முதலாவது போட்டி கார்டிப் நகரில் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் இந்தியா

முதல் போட்டியில் இந்தியா

நாளை நடைபெறும் முதல் போட்டியில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் களம் காணுகின்றன.

இறுதிப் போட்டி ஜூன் 23

இறுதிப் போட்டி ஜூன் 23

ஜூன் 23ம் தேதி எட்பாஸ்டன் நகரில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

மொத்தம் 8 அணிகள்

மொத்தம் 8 அணிகள்

இந்தப் போட்டித் தொடரில் ஐசிசியின் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் எட்டு அணிகள் மட்டும் பங்கேற்கின்றன.

நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா

நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா

நடப்புச் சாம்பியனாக ஆஸ்திரேலியா இப்போட்டியை சந்திக்கிறது. கடைசியாக நடந்த 2009 போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாதான் சாம்பியன் பட்டத்தை வென்றது.

7வது எடிஷன்

7வது எடிஷன்

இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டி 7வது தொடராகும். இதுவே கடைசி தொடருமாகும்.

2 முறை சாம்பியன்

2 முறை சாம்பியன்

ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபியை 2 முறை வென்றுள்ளது. அதாவது 2006 மற்றும் 2009தொடரை அது வென்றுள்ளது. இந்த முறை வென்றால் அது ஹாட்ரிக் வெற்றியாக அமையும்.

இந்தியாவும் கூட சாம்பியன்தான்

இந்தியாவும் கூட சாம்பியன்தான்

முதல் தொடரை அதாவது 1998ல் தென் ஆப்பிரிக்கா சாம்பியனானது. அடுத்து 2000மாவது ஆண்டு நியூசிலாந்து வென்றது. 2002 தொடரை இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து பகிர்ந்து கொண்டன. 2004 தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

3 மைதாங்கள்தான்

3 மைதாங்கள்தான்

கார்டிப், ஓவல், எட்பாஸ்டன் ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன.

2 குரூப்.. ஆளுக்கு 3 போட்டி

2 குரூப்.. ஆளுக்கு 3 போட்டி

8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.ஆளுக்கு 3 போட்டிகள் நடைபெறும். முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குப் போகும்.

நாம எங்க இருக்கோம்

நாம எங்க இருக்கோம்

இந்தியா பி பிரிவில் உள்ளது.இந்தியாவுடன், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் இடம் பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு ஏ

ஆஸ்திரேலியாவுக்கு ஏ

ஏ பிரிவில் சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து ஆகியவை உள்ளன.

ஜெயிச்சா 20 லட்சம் டாலர் பரிசுங்கோ

ஜெயிச்சா 20 லட்சம் டாலர் பரிசுங்கோ

வெற்றியாளருக்கு 20 லட்சம் டாலர் பரிசுப் பணம் கிடைக்கும்.

தோத்தா 10 லட்சம் டாலர்

தோத்தா 10 லட்சம் டாலர்

இறுதிப் போட்டியில் தோல்வியுற்று 2வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 10 லட்சம் டாலர் பரிசுத் தொகையாக கிடைக்கும்.

அரை இறுதி வந்தாலே 4 லட்சம் டாலர் பரிசாம்

அரை இறுதி வந்தாலே 4 லட்சம் டாலர் பரிசாம்

அரை இறுதிப் போட்டிக்கு வரும் அணிகளுக்கு பரிசுத் தொகையாக ஆளுக்கு 4 லட்சம் டாலர் கிடைக்கும்.

குரூப்பில் 3வது இடம் பிடிச்சா

குரூப்பில் 3வது இடம் பிடிச்சா

ஒவ்வொரு பிரிவிலும் 3வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 1 லட்சம் டாலர் தொகையாக கிடைக்கும்.

காசு தர மாட்டோம்

காசு தர மாட்டோம்

அதேசமயம், 7 மற்றும் 8வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு ஒரு பைசாவும் தரப்பட மாட்டாது.

பார்க்கலாம்.. நாம சாம்பியனாகிறோமா இல்லையா என்று....

Story first published: Thursday, June 6, 2013, 10:21 [IST]
Other articles published on Jun 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+