சபாஷ்... அழகான சதம் போட்டார் ஷிகர் தவான்!
கார்டிப்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மாலை தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கிய இந்தியா சிறப்பாக ஆடி வருகிறது. ஷிகர் தவான் சதம் போட்டு தொடர்ந்து ஆடி வருகிறார்.
34 ஓவர்களில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்து 209 ரன்களை எடுத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் இறங்கினர். சர்மா 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 104 ரன்களுடனும், விராத் கோஹ்லி 31 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது.

15 மாதங்களுக்குப் பிறகு
15 மாத இடைவெளிக்குப் பிறகு இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இன்று நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன.

ஒவ்வொரு போட்டியும் முக்கியம்
இந்தியா மொத்தம் 3 போட்டிகளில் மோதவுள்ளது. இந்த மூன்றிலுமே இந்தியா வென்றாக வேண்டும். எனவே ஒவ்வொரு மோதலுமே முக்கியமானது.

சாம்பியன் போல ஆடனுமே...
இந்தியாதான் நடப்பு உலக சாம்பியன் ஆகும். எனவே ஒரு சாம்பியன் போல விளையாட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

15 மாதத்திற்குப் பிறகு ஒரு நாள்
15 மாதங்களாக இந்தியா, வெளிநாட்டில் எந்த ஒரு நாள் போட்டியிலும் ஆடவில்லை. எனவே சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இந்தியாவுக்கு சவாலானவை.

ஐபிஎல் அனுபவம் கை கொடுக்குமா...
ஐபிஎல் போட்டிகளில் ஆடிய அனுபவம் இந்தியாவுக்கு கை கொடுக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் திணேஷ் கார்த்திக் இதே பார்முடன் பிரமாதமாக தொடர்ந்து ஆடினால், நிச்சயம், இந்தியாவுக்கு நல்ல நேரம்தான்.

ஆனா ராசி ஒர்க அவுட் ஆகலாம்
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவுக்கு நல்ல ரெக்கார்ட் உள்ளது. இதுவரை மோதிய இரு போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது.

நம்பர் ஒன்னா... சாம்பியனா
தென் ஆப்பிரிக்க அணிதான் ஒரு நாள் போட்டிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணி. இந்தியாவோ உலக சாம்பியனாகும்.


Click it and Unblock the Notifications