Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ்.... ஒரு வாட்டி கூட நாம தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றதே கிடையாது, தெரியுமா?

கார்டிப்: எப்படி உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை நாம் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லையோ அதேபோல மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இதுவரை நாம் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றதே இல்லை. அந்தசாதனையை நேற்றைய வெற்றியின் மூலம் இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

நேற்று தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவின் வெற்றிக்கு ஷிகர் தவான் போட்ட அபாரமான சதம் உதவியது. அதேபோல ரவீந்திர ஜடேஜா, ரோஹித் சர்மா போன்றோரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதுவரை தோற்றதே இல்லை

இதுவரை தோற்றதே இல்லை

மினி உலகக்கோப்பைப் போட்டி எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றதே கிடையாது.

மிரட்டிய பிளஸ்சிஸ் - மெக் லாரன்

மிரட்டிய பிளஸ்சிஸ் - மெக் லாரன்

தென் ஆப்பிரிக்கா தனது சேசிங்கின்போது கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் அதை தடுத்து விட்டனர். குறிப்பாக பிளஸ்சிஸ், மெக்லாரன் இருவரும் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர்.

அபாரமான டிவில்லியர்ஸ்

அபாரமான டிவில்லியர்ஸ்

ஒருபக்கம் விக்கெட்கள் விழுந்தாலும் மறுபக்கம் டிவில்லியர்ஸ் சிறப்பாக ஆடி 70 ரன்களைக் குவித்தார். அவர் ஆட்டமிழந்ததும் தென் ஆப்பிரிக்காவின் வாய்ப்பு மங்கிப் போனது.

33வது அரை சதம்

33வது அரை சதம்

டிவில்லியர்ஸுக்கு நேற்று போட்ட அரைசதம் ஒரு நாள் போட்டிகளில் 33வது அரை சதமாகும்.

இந்தியாவின் கார்டிப் சாதனை

இந்தியாவின் கார்டிப் சாதனை

நேற்று இந்தியா எடுத்த 331 ரன்கள்தான் கார்டிப் மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

இரண்டே இரண்டுலெப்ட் சதம்தான்

இரண்டே இரண்டுலெப்ட் சதம்தான்

அதேபோல தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 6 வருடங்களில் இரண்டே இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள்தான் சதம் போட்டுள்ளனர். ஒருவர் சங்கக்கரா. கடந்த ஆண்டு ஜனவரியில் அவர் சதமடித்தார். நேற்று ஷிகர் தவான் சதம் போட்டார்.

ஏமாற்றிய கார்த்திக்

ஏமாற்றிய கார்த்திக்

இரு பயிற்சிப் போட்டிகளிலும் பிரமாதமாக ஆடிய திணேஷ் கார்த்திக் நேற்றும் பட்டையைக் கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 14 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

தவானுக்கு முதல் செஞ்சுரி

தவானுக்கு முதல் செஞ்சுரி

ஷிகர் தவான் நேற்று போட்ட சதம் ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு முதல் சதமாகும்.

ஸ்பின்னைப் பார்த்து மிரண்ட கோஹ்லி

ஸ்பின்னைப் பார்த்து மிரண்ட கோஹ்லி

விராத் கோஹ்லி, நேற்று தென் ஆப்பிரிக்க ஸ்பின் பந்து வீச்சில் மிரண்டு தடுமாறினார்.

இது டோணிசொன்னது

இது டோணிசொன்னது

போட்டிக்கு முன்பு டோணி கூறுகையில், இந்திய ரசிகர்களுக்கு முன்பு விளையாடுவது சுகமானது என்றார்.

டிவில்லியர்ஸ் என்ன சொன்னார்...

டிவில்லியர்ஸ் என்ன சொன்னார்...

தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் கூறுகையில், இது நியூட்ரல் வெனு. ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ நாங்கள் விளையாடியாக வேண்டும் என்றார்.

ஸ்டெயின் இல்லை

ஸ்டெயின் இல்லை

நல்ல வேளையாக நேற்று தென் ஆப்பிரிக்க அணியில் டேரல் ஸ்டெயின் இல்லை.இல்லாவிட்டால் இந்திய வீரர்கள் ரன் எடுக்க கடுமையாக திணறியிருப்பார்கள்.

Story first published: Friday, June 7, 2013, 11:48 [IST]
Other articles published on Jun 7, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+