Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக் போட்டியி்ன் துவக்க விழாவில் மழை குறுக்கிடலாம்-வானிலை ஆய்வு மையம்

London Statdium
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் அன்று லண்டனில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதன் துவக்க விழா அதே நாளில் நடைபெற உள்ளது. இதற்காக லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் அணிகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை ஆகியவை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வரும் 27ம் தேதி லண்டன் நகரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது,

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவின் போது, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 5 நாட்களின் வானிலையை பொறுத்து, இதை சரியாக கணித்துவிடலாம். ஆனால் வானிலையை பொறுத்த வரை எதையும் உறுதியாக கூற முடியாது. இது மாற்றத்திற்கு உட்பட்டது என்றார்.

லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் உலகின் பல நாடுகளை சேர்ந்த பார்வையாளர்கள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 24, 2012, 15:38 [IST]
Other articles published on Jul 24, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+