Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாவற்றிலும் நம்பர் 1....ஆனா டைட்டில் போச்சே...!

கொல்கத்தா: அதிக ரன் குவித்தது, அதிக விக்கெட் வீழ்த்தியது, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது என முக்கியமானவற்றில் முதலிடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொதப்பலான ஆட்டம் காரணமாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைப் பெறாமல் ரசிகர்களை வெகுவாக ஏமாற்றி விட்டது.

இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ் என்று அலுத்துக் கொள்ளும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிலை மாறி விட்டது.

பேட்டிங், பந்து வீச்சு, புள்ளிகள் பட்டி்யலில் முதலிடம் என கலக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் சிக்கி எலி போல சுருண்டு போனது பார்த்தவர்களை கடுப்பாக்கி விட்டது.

நம்பர் ஒன் புள்ளி

நம்பர் ஒன் புள்ளி

லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ்தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் சாம்பியன் பட்டத்தைப் பெறத் தவறி விட்டது.

பந்து வீச்சிலும் நம்பர் ஒன்

பந்து வீச்சிலும் நம்பர் ஒன்

பந்து வீச்சிலும் சென்னைதான் முதலிடம். அதாவது அந்த அணியின் பிராவோதான் அதிக விக்கெட்களை வீழ்த்தினார். அவர் மொத்தம் 32 விக்கெட்களைச் சாய்த்தார். நேற்றைய இறுதிப் போட்டியில் மட்டும் அவர் 4 விக்கெட்களை அட்டகாசாக வீழ்த்தினார். ஆனாலும் பட்டம் நமக்குக்கிடைக்கவில்லை.

பேட்டிங்கிலும் நாம்தான் பர்ஸ்ட்

பேட்டிங்கிலும் நாம்தான் பர்ஸ்ட்

பேட்டிங்கிலும் சென்னைதான் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணியின் மைக்கேல் ஹஸ்ஸிதான் அதிக பட்சமாக 738 ரன்களைக் குவித்திருந்தார். இருப்பினும் நேற்றைய போட்டியில் ஒரு ரன்னோடு அவரை விரட்டிவிட்டனர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.,

தொடர்ச்சியாக 2வது முறை

தொடர்ச்சியாக 2வது முறை

கடந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக ஆடி இறுதிப் போட்டி வரை வந்தது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் சிக்கி பட்டம் பெறத் தவறியது. இந்த முறையும் அது சீரான வேகத்தில் இறுதிப் போட்டிக்கு வந்தது. ஆனால் மும்பையிடம் தோல்வியுற்று விட்டது.

2 முறை சாம்பியன் - 3 முறை ரன்னர்

2 முறை சாம்பியன் - 3 முறை ரன்னர்

இதுவரை நடந்து முடிந்துள்ள 6 ஐஎபிஎல் தொடர்களில் சென்னை அணி இதுவரை 2 முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது. 3 முறை ரன்னர் அப் ஆகியுள்ளது. இந்த சாதனையைப் படைத்த முதல் அணியும் சென்னைதான்.

எப்படியோ இதிலும் சென்னையே முதலிடத்தில் இருப்பதை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்....

Story first published: Monday, May 27, 2013, 11:02 [IST]
Other articles published on May 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+