புஜாராவுக்கு திருமண இன்னிங்ஸ் தொடக்கம்!!
ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான புஜாரா தொழில் அதிபர் மகள் புஜா பாப்ரியை மணந்தார்.
இந்திய அணியின் முன்னணி வீரரான புஜாராவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 6-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன் தினம் இருந்தே திருமண சடங்குகள் நடைபெற்று நேற்று புஜாரா- புஜா திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்துக்கு உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இன்று திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
திருமணத்தால் அண்மையில் நடைபெற்ற இரானி கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பயிற்சி ஆட்டம் ஆகியவற்றில் புஜாரா விளையாடவில்லை. நாளை மறுநாள் இந்திய அணியுடன் புஜாரா இணைந்து கொள்கிறார்.
Story first published: Thursday, February 14, 2013, 11:41 [IST]
Other articles published on Feb 14, 2013


Click it and Unblock the Notifications