Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இன்று மோதல்

பர்மிங்காம்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இன்று மோதுகின்றன. சாம்பியன் பட்டத்தை இரண்டு முறை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இருப்பினும் தற்போது அந்த அணி சற்று பலவீனமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் வெறும் 65 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் கேப்டன் கிளார்க் முதுகுவலியால் விலகிவிட்டார்.எஞ்சிய ஆட்டங்களிலும் அவர் விளையாடுவாரா என்பதும் சந்தேகமே. இன்றைய போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருப்பவர் ஜார்ஜ் பெய்லி.

இங்கிலாந்து அணி உள்ளூர் அணி என்பது அதற்கு ஒரு சாதகம். விரைவில் நடைபெற உள்ள ஆஷஸ் தொடருக்கு முன்பாக இரு அணிகளும் மோதும் போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Story first published: Saturday, June 8, 2013, 11:29 [IST]
Other articles published on Jun 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+