Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ 2008 கால்பந்து: அரை இறுதிக்கு ரஷ்யா தகுதி

Football russia team
பாசல்: யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் 3வது காலிறுதிப் போட்டியில் ஹாலந்தை வீழ்த்தி ரஷ்யா அரை இறுதிக்கு முன்னேறியது.

யூரோ கோப்பைப் போட்டியின் 3வது காலிறுதிப் போட்டி பாசல் நகரில் நடந்தது. இதில், ஹாலந்தும், ரஷ்யாவும் மோதின.

விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ரஷ்யா அபாரமாக ஆடி ஹாலந்தை தூள் தூளாக்கியது.

கூடுதல் நேரத்தின் கடைசி எட்டு நிமிடங்களில் ரஷ்யாவின் டிமிட்ரி டோர்பின்ஸ்கி, ஆன்ட்ரீ அர்ஷ்வின் ஆகியோர் போட்ட இருகோல்களும் ரஷ்யாவை அரை இறுதிக்கு தூக்கிச் சென்றது.

ஆட்டம் முழுவதும் ரஷ்யாவின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. ஹாலந்து வீரர்களை கோல் போஸ்ட் பக்கமே போக முடியாத அளவுக்கு ரஷ்ய வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் ரஷ்யாவின் ரோமன் பேவ்லிசென்கோ அபாரமாக ஒருகோல் அடித்து ரஷ்யாவுக்கு முன்னிலை தேடித் தந்தார்.

ஆனால், 86வது நிமிடத்தில், ஹாலந்தின் ரூட் வான் நிஸ்டல்ரூய் ஒரு கோலடித்து ரஷ்யாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை.

இதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டது. இதிலும் ரஷ்ய வீரர்கள் படு ஆவேசமாக ஆடினர். அந்த ஆட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்தது.

ஆட்டத்தின் 22வது நிமிடத்தில், டோர்பின்ஸ்கி ஒரு கோலடித்தார். அடுத்த நான்கு நிமிடங்களில் அர்ஷவின் ஒருகோலடித்து ரஷ்யாவை உற்சாகக் கடலில் ஆழ்த்தினார். அதன் பின்னர் இருதரப்பும் கோல் ஏதும் போடவில்லை. இதையடுத்து 3-1 என்ற கோல் கணக்கில் ரஷ்யா அபார வெற்றியைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் கடைசி காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினும், இத்தாலியும் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணியுடன், ரஷ்யா அரை இறுதியில் சந்திக்கும்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+