Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சினிமா நடிகைகளுடன் காதலில் விழுந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்

இந்தியாவில் ரசிகர்களுக்கு பரப்பான செய்திகளை வழங்குபவை சினிமாவும் கிரிக்கெட்டும்தான். சினிமாவில் இருப்பவர்களுக்கு கிரிக்கெட் பற்றியும்., கிரிக்கெட்டில் இருப்பவர்களுக்கு சினிமா பற்றியும் என்னத் தெரியும் என்று யாரும் சொல்லிவிட முடியாது. அந்தஅளவிற்கு கிரிக்கெட்டும் சினிமாவும் தொடர்புடையதாக மாறிவருகின்றன.

இன்றைக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கும் ஐ.பி.எல் அணிகளில் சொந்தக்காரர்களாக பாலிவுட் நட்சத்திரங்கள் இருக்கின்றனர். கிரிக்கெட் அணிகளின் விளம்பர தூதுவர்களாக சினிமா நடிகர்கள், நடிகையர்கள் நியமிக்கப்படுகின்றன.

நம்முடைய கட்டுரை அதைப்பற்றியது மட்டுமல்ல சினிமா நடிகைகள் வீசிய காதல் பந்துகளில் கிளீன் போல்டான கிரிக்கெட் வீரர்களைப் பற்றியதுதான்.

கிசு கிசுவும் உண்மைகளும்...

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாலிவுட் நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கப் பட்டுள்ளனர். இதில் ஒரு சில ஜோடிகள் மட்டுமே திருமணம் வரை சென்றுள்ளது. சில நிச்சயம் வரையும், சில கிசுகிசுவிலேயே முடிந்து போனதும் உண்டு.

பட்டோடி - ஷர்மிளா தாகூர் காதல்

பட்டோடி - ஷர்மிளா தாகூர் காதல்

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்று சிறப்பு மிக்க கேப்டன்களில் ஒருவர் பட்டோடி. இவர் பாலிவுட்டின் முன்னாள் பிரபல நடிகை ஷர்மிளா தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதலின் சாட்சியாக சயீப் அலிகான், மகள்கள் சோகா அலிகான், சபா அலிகான் ஆகியோர் உள்ளனர்.

கபில்தேவ் – சரிகா

கபில்தேவ் – சரிகா

கபில்தேவ் - சரிகா காதல் ஜோடி பிரபலமான காதல் ஜோடியாக பேசப்பட்டது. ஆனால் சரிகாவிற்கு கமலுடனும், கபிலுக்கு ரீமாவுடனும் திருமணம் நடந்தது.

ரவிசாஸ்திரி- அம்ரிதாசிங்

ரவிசாஸ்திரி- அம்ரிதாசிங்

ரவிசாஸ்த்திரி - அம்ரிதாசிங் காதல் பரபரப்பாக பேசப்பட்டது. நிச்சயம் மட்டுமே நடந்தது இடையில் முறிந்து போனது.

அசாருதின், சங்கீதா பிஜ்லானி

அசாருதின், சங்கீதா பிஜ்லானி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், நடிகை சங்கீதா உடன் ஏற்பட்ட காதலால் முதல் மனைவியை விட்டுப் பிரிந்தார். பின்னர் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

கங்குலி – நக்மா

கங்குலி – நக்மா

அதிரடி கேப்டன் என்று புகழப்பட்ட கங்குலிக்கு நக்மா உடன் காதல் ஏற்பட்டது. கோயில், குளம் என சுற்றினர். ஆனால் கங்குலியின் மனைவி டோனா இந்த காதல் வலையில் இருந்து கங்குலியை எப்படியோ மீட்டுக்கொண்டார்.

டோணியின் காதல்கள்

டோணியின் காதல்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் டோணியுடன் கிசுகிசுக்கப்பட்டவர்கள் தீபிகா படுகோனே, லட்சுமி ராய் என நடிகைகள் உள்ளனர். ஆனால் அவர் நடிகைகளை விட்டுவிட்டு சமர்த்தாக சாஷியை திருமணம் செய்து கொண்டார்.

விளையாட்டுப்பிள்ளை யுவராஜ் சிங்

விளையாட்டுப்பிள்ளை யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். இவருக்கும் பாலிவுட் நடிகைகள் அமிஷா படேல், நேகா துபியா ஆகியோருக்கும் இடையேயான தொடர்பு கிசுகிசுக்களாக வெளியாகியானது.

ஆரம்பத்தில் கிம் ஷர்மா, அப்புறம் தீபிகா படுகோனே என காதலிகள் பட்டியல் மிகநீளமானது. இப்போது நேகா துபியா உடன் டேட்டிங் என செய்திகள் வெளியாகிவருகின்றன.

ரோஹித் ஷர்மா – ஷோபியா

ரோஹித் ஷர்மா – ஷோபியா

ரோஹித் ஷர்மாவுடன் கிசுகிசுக்கப்படும் ஷோபியா ஹயத் இங்கிலாத்தை பின்புலமாகக் கொண்டவர். இருவரும் தங்களின் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் சிறுவயதில் இருந்தே நண்பர்கள் என்று கூறியுள்ளனர்.

ஸ்ரீசாந்த் – பிரியங்கா சோப்ரா

ஸ்ரீசாந்த் – பிரியங்கா சோப்ரா

சர்ச்சை நாயகன் ஸ்ரீசாந்த் உடன் பிரியங்கா சோப்ராவிற்கு காதல் என்ற கிசு கிசு பரவியது உண்டு. அதே சமயம் மினிசா லம்பா உடன் ஸ்ரீசாந்த் டேட்டிங் போனார் என்றும் செய்திகள் பரபரப்பாக வெளியானது.

ஹர்பஜன் சிங் – கீதா பஸ்ரா

ஹர்பஜன் சிங் – கீதா பஸ்ரா

பாஜி என்று செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவை காதலிக்கிறார் என்றும் விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் அதை இருவருமே ஒத்துக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

விராட் ஹோக்லி – சாரா

விராட் ஹோக்லி – சாரா

இந்திய அணியின் இளம் நாயகன் விராட் ஹோக்லியும் காதலுக்கு தப்பவில்லை. விராத் கோஹ்லி, சாரா ஜேன். ஜோடிதான் சமீபத்திய கிசுகிசுவிற்கு இலக்காகி உள்ளது. தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் நாயகி சாராவும், ஹோக்லியும் பெங்களூரில் சந்தித்துள்ளனர். அன்று முதலே இருவரும் நெருங்கிப் பழகவும், எங்கு சென்றாலும் ஜோடியாக செல்வதுமாக உள்ளனராம்.

வெளிநாட்டு காதல்

வெளிநாட்டு காதல்

1960-ல் அஞ்சு மகேந்த்ரா மேற்கு இந்திய வீரர் காரி சோபர் உடன் காதல் ஏற்பட்டது. அதையும் தாண்டி

1980களில் நீனா குப்தா விவிலியன் ரிச்சர்ட் காதல், கல்யாணம் செய்யாமல் குழந்தை என புரட்சிகரமான ஜோடியாக பேசப்பட்டது.

பாகிஸ்தான் வீரர் மோஸிஸ் கான், ரீனா ராய் காதல் கல்யாணத்தில் முடிந்தது. சிலநாட்களில் ரீனா மட்டும் பாகிஸ்தானில் இருந்து திரும்பினார்.

Story first published: Tuesday, April 9, 2013, 9:27 [IST]
Other articles published on Apr 9, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+