மொகாலியில் நாளை ஒருநாள் போட்டி- இங்கிலாந்து அணியில் மாற்றம்?

இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே மொகாலியில் நாளை 4-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணியின் அனைத்து வீரர்களுமே தடுமாற்றத்தில் இருப்பதால் பயிற்சியாளர் ஆஷ்லே கைல்ஸ், எச்சரிக்கையுடன் விளையாடுமாறு வீரர்களை அறிவுறுத்தியுள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற போட்டியிலிருந்து சில பாடங்களைக் கற்றுக் கொண்டு தவறுகளை தமது அணியினர் திருத்திக் கொள்ள வேண்டும் என்பது கைல்ஸின் கருத்தாக உள்ளது.
நாளைய போட்டியில் இங்கிலாந்து அணியின் கீஸ்வெட்டர் அனேகமாக நீக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அவர் சரியாக ஆடவில்லை. கடந்த 3 போட்டிகளிலுமே மொத்தம் 42ரன்களைத்தான் அவர் எடுத்திருக்கிறார். இதனால் அவர் மாற்றப்படுகிறார்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் இயான்பெல், 3 போட்டிகலில் 111 ரன்களைக் குவித்திருக்கிறார். அவருக்கு அடுத்ததாக கேப்டன் குக் 109 ரன்களையும் பீட்டர்சன் 103 ரன்களையும் ரூட் 75 ரன்களையும் சமித் படேல் 74 ரன்களையும் எடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications