ஒலிம்பிக் சைக்கிள் பந்தய வீரர் கிறிஸ் ஹாய் திடீர் ஓய்வு

ஒலிம்பிக்கில், இங்கிலாந்தின் வெற்றிகரமான சாதனையாளர் என்று அழைக்கப்படும் சைக்கிள் பந்தய வீரர் கிறிஸ் ஹாய் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.
37 வயதான கிறிஸ் ஹாய், 2004, 2008, 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். 11 முறை உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறார்.
2014ம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களைக் குவிப்பார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு கிறிஸ் ஹாய்யின் இந்த திடீர் அறிவிப்பால் பொய்த்துவிட்டது.
Story first published: Friday, April 19, 2013, 10:25 [IST]
Other articles published on Apr 19, 2013


Click it and Unblock the Notifications