நாக்குக்கும் விருந்தாகப் போகும் ஐபிஎல்: அணிகளின் பெயர்களில் அட்டகாச உணவுகள்!
டெல்லி: புதுமையாக உணவுகளுக்கு கிரிக்கெட் அணி மற்றும் வீரர்களின் பெயர்களை சூட்டி ஆபர்களை அறிவித்திருக்கிறது ஒரு ஹோட்டல். ஒருபுறம் ஐபிஎல் கொண்டாட்டம் களை கட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் ஐபிஎல்-ஐ காரணம் காட்டி சிலர் கல்லாக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரிய திரைகள் கட்டி கிரிக்கெட்டைக் காட்டி, கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்த ஹோட்டல்கள் தற்போது புதுமையாக காலத்திற்கு தக்க தன் வியாபார யுக்திகளை மாற்றிக் கொண்டு வருகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டனில் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், மே 26ல் முடிவடைகின்றன. வேறு சில ஹோட்டல்கள் கிரிக்கெட் காதலர்களுக்கென விதவிதமான சலுகைகளைத் தருகின்றன ஹோட்டல்கள். அதாவது ஒவ்வொரு சிக்ஸருக்கு ஒரு ஆபர் அல்லது ஒவ்வொரு விக்கெட்டுக்கு ஒரு ஆபர்.

கண்களுக்கு மட்டும்ல்ல... வாய்க்கும் விருந்து தான்
டெல்லியில் உள்ள ஷீபா எனும் ஹோட்டலில், புதுமையாக உணவுகளுக்கு கிரிக்கெட் அணி மற்றும் வீரர்களின் பெயர்களை சூட்டி ஆபர்களை அறிவித்திருக்கிறார்கள்

லைவ்வா பார்க்கலாம்...
9 அடி நீளமுள்ள பேட்டில் ஐபிஎல்-ன் அட்டவணையை எழுதி பார்வையாளர்களுக்கென வைத்திருக்கிறார்களாம். 3 புரொஜக்டர்களின் உதவியுடன் நேரடி ஒலிபரப்பு வர்ணனையுடன் ஒளிபரப்பப்படுகிறதாம்.

ஐபிஎல் ஆபர்...
சைவ மற்றும் அசைவப்பிரியர்களுக்கென தனித்தனி ஆபர்கள். இங்கு ஹெர்பல் சீசா, 6 இந்திய மதுவகைகள் அல்லது 6 பீர் வெறும் ரூ1500 தான். 20% சலுகையும் பில்லில் உண்டாம்.

கொடி பறக்குது...
ஆரம்ப விழாவில் 9 அணியின் கொடிகளை வைத்து, கிரிக்கெட் அரங்க நினைவை ரசிகர்களுக்கு உருவாக்கினார்களாம் ஹோட்டல் நிர்வாகத்தார்.

அணி பேர்ல சாப்பாடு...
ஒவ்வொரு உணவுக்கும் ஒரு அணியின் பெயர். உதாரணமாக, டேர்டெவில்ஸ் சிக்கன்விங்ஸ்(டெல்லி டேர்டெவில்ஸ்), ராயல் மட்டன் மோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்), கொல்கத்தா கசுண்டி பொடைடோஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), நட்ஸ் அபவுட் பெங்களூர் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)

உள்ளம் கேட்குமே....
நாட்டிற்கு தகுந்த மாதிரி உணவும் உண்டாம். ஹரா கபாப், அட்ரகி பன்னீர் கபாப் ... என நீள்கிறது லிஸ்ட்.


Click it and Unblock the Notifications