Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் இன்னும் 7 போட்டிகளில் வெல்ல முடியும்: ஜோகன் போத்தா நம்பிக்கை

Delhi Daredevils can still win seven in a row, says Johan Botha
டெல்லி: நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் இன்னமும் 7 போட்டிகளில் வெல்ல முடியும் என்று அந்த அணியின் வீரரான ஜோகன் போத்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 6வது தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் மட்டுமே டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் டெல்லி அணி தோற்கடிக்கப்பட்டது. தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசியில் இருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

இந்தாணியின் ஜோகன் போத்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பேட்டிங் வியூகம் கை கொடுக்கவில்லை. முக்கியமான நேரங்களில் சிறுசிறு தவறுகளை பீல்டிங்கில் விட்டுவிடுகிறோம். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எங்களது வியூகம் கை கொடுத்தது. இதேபோல் வார்னரை பின்வரிசையில் களம் இறக்கிய வியூகமும் தவறானதாகப் போய்விட்டது. வார்னர் நன்றாக விளையாடக் கூடியவர்.

மஹேளா ஜெயவர்த்தனே மற்றும் சேவாக்கின் தொடக்க ஆட்டம் மிகச் சரியானதாக இருக்கிறது. இன்னும் எங்கள் அணி அடுத்த 7 போட்டிகளிலும் விளையாடி வெல்லக் கூடிய பலம் கொண்டதாகவே இருக்கிறது என்றார்.

Story first published: Thursday, April 25, 2013, 14:38 [IST]
Other articles published on Apr 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+