Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி: தில்ஷன் சதம்-தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இலங்கை

செஞ்சுரியன்: தில்ஷன் சதம் கடக்க தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் இலங்கை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று செஞ்சுரியனில் நடந்த துவக்க போட்டியில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பீல்டிங் தேர்வு செய்து, மோசமான தவறை செய்தது.

இலங்கை அணியின் துவக்க வீரர் ஜெயசூர்யா 10 ரன்களுக்கு அவுட்டானார். மற்றொரு துவக்க வீரரான தில்ஷன், தென் ஆப்ரிக்கா பவுலிங்கை ஒரு கை பார்த்தார். அவர் 1 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 92 பந்தில் 106 ரன்கள் எடு்ததார்.

சங்ககரா 54, ஜெயவர்தனே 77 ரன்கள் எடுத்து அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தனர். இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை சேஸ் செய்த ஆம்லா 2 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்படன் ஸ்மித் 58, காலிஸ் 41 ரன்களுக்கு அவுட்டானார்கள். ஆனால், அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக அவுட்டானார்கள்.

தென் ஆப்ரிக்கா 37.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து இலங்கை டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று நடக்கும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+