Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலீஸ் பிரிமியர் லீக்: செல்ஸியா அணி 4-2 கோல் கணக்கில் அபார வெற்றி-ரீடிங் படுதோல்வி

EPL 2012-13: Chelsea comeback to beat Reading 4-2
லண்டன்: இங்கிலீஸ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் ஐரோப்பிய சாம்பியனான செல்ஸியா அணி 4-2 கோல் கணக்கில், ரீடிங் அணியை தோற்கடித்தது.

இங்கிலீஸ் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் லண்டனில் உள்ள ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான செல்ஸியா அணியும், ரீடிங் அணியும் மோதியது.

போட்டியின் 18வது நிமிடத்தில் செல்ஸியா அணியின் பிராங்க் லேம்பார்டு முதல் கோலை அடித்தார். ஆனால் 25வது நிமிடத்தில் எதிரணியான ரீடிங் தரப்பில் போகிரிப் ஒரு கோலை அடித்து அதை சமன் செய்தார்.

29வது நிமிடத்தில் ரீடிங் அணியின் குத்தேர் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலையை பெற்று தந்தார். கோல் கணக்கை சமன் செய்ய போராடிய செல்ஸியா அணிக்கு 69வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திய சாஹில் ஒரு கோல் அடித்தார்.

அதன்பிறகு அதிரடியை தொடர்ந்த செல்ஸியா அணிக்கு 81வது நிமிடத்தில் பெர்னான்டோஸ் மூலம் மேலும் கோல் கிடைத்தது. கூடுதல் நேரத்தில் ஒரு செல்ஸியா அணியின் இவானோவிக் ஒரு கோலை அடித்தார்.

இதன் மூலம் போட்டியின் முடிவில் செல்ஸியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Story first published: Thursday, August 23, 2012, 17:14 [IST]
Other articles published on Aug 23, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+