Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலீஷ் பிரிமியர் லீக்: வான் பெர்சி 'ஹாட்ரிக்' கோல்-மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 'திரில்' வெற்றி

EPL: Van Persie hat-trick hands Man United win
சவுத்தாம்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் சவுத்தாம்டன் அணிக்கு எதிரான லீக் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வான் பெர்சி ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன்மூலம் 3-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி்க்கு போட்டியின் இறுதிக்கட்டத்தில் வெற்றி கிடைத்தது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சவுத்தாம்டனில் உள்ள செயின்ட் மேரிஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், சவுத்தாம்டன், மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய இரு அணிகளும் மோதின.

சொந்த மண்ணில் களமிறங்கிய சவுத்தாம்டன் அணி போட்டியின் 16வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. சவுத்தாம்டன் அணியின் ரிக்கி லேம்பர்ட் முதல் கோலை அடித்தார். இதையடுத்து மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ராபின் வான் பெர்சி அதிரடியாக பந்தை பாஸ் செய்து சென்று 23வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.

இந்த நிலையில் 55வது நிமிடத்தில் சவுத்தாம்டன் அணியின் மார்கன் சிக்னிடர்லின் ஒரு கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். அதன்பிறகு நீண்டநேரம் போராட்டிய மான்செஸ்டர் அணிக்கு, மீண்டும் ராபின் வான் பெர்சி கைக்கொடுத்தார்.

போட்டியின் 87வது நிமிடத்தில் ராபின் வான் 2வது கோலை அடித்தார். எதிர்பாராதவிதமாக அடுத்த 3 நிமிடத்தில் நானி கொடுத்த பாஸை சிறப்பாக வாங்கிய ராபின் வான் மீண்டும் ஒரு கோலை அடித்து அசத்தினார்.

இதன்மூலம் போட்டியின் முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, September 4, 2012, 13:33 [IST]
Other articles published on Sep 4, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+