அசாதாரணம்... வாட்சன் ஆட்டம் குறித்து பிரமிக்கும் பிளமிங்
ஜெய்ப்பூர்: 34 பந்துகளில் 70 ரன்களைக் குவித்து ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வெற்றி தேடித் தந்த ஷேன் வாட்சனின் ஆட்டம் மிகவும் அசாதாரணமானதாகும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.
நேற்று ஜெய்ப்பூரில்நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ், 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வீழ்த்தியது. வாட்சனின் அதிரடி ஆட்டம்தான் சென்னையின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.
வாட்சனின் ஆட்டத்தை தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிளமிங் கூறியிருப்பதாவது...

5 ஓவர்களில் மாற்றிப் போட்ட வாட்சன்
சென்னையின் வசம் இருந்த வெற்றியை அப்படியே 5 ஓவர்களில் மாற்றிப் போட்டு விட்டார் வாட்சன்.

அசாதாராணமான ஆட்டம்
வாட்சனின் ஆட்டம் மிகவும் அசாதாரணமானது. மற்ற வீரர்கள் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் வாட்சன் அதை லாவகமாக எதிர்கொண்டு ஆடியது பிரமிக்க வைக்கிறது.

சட்டென்று மாற்றிப் போட்டார்
சென்னையின் வசமே வெற்றி தங்கியிருந்த நிலையில் ஏதோ ஸ்விட்ச் போட்டது போல சட்டென்று மாற்றிப் போட்டு விட்டார் வாட்சன்.

பந்து வீச்சாளர்களைக் குறை சொல்ல முடியாது
எங்களது பந்து வீச்சாளர்களைக் குறை சொல்ல முடியாது. நன்றாகத்தான் பந்து வீசினர். ஆனால் வாட்சன் வந்ததும் நிலைமை மாறிப் போனது. அஸ்வினை நம்பினோம். ஆனால் அவரை நேற்று ஒரே ஓவரில் நையப்புடைத்து விட்டனர்.

பேட்டிங் சரியில்லை என்று சொல்லலாம்
எங்களது பேட்டிங் இன்னும் கொஞ்சம் பலமாக இருந்திருக்க வேண்டும். கூடுதலாக ரன்கள் எடுத்திருக்கலாம் என்றார் பிளமிங்.


Click it and Unblock the Notifications