Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன் அரையிறுதியில் பெடரர்-ஹாஸ் மோதல்

Federe
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார். இதில் அவர் ஜெர்மனி வீரர் டாமி ஹாசை எதிர்கொள்கிறார்.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், குரோஷியாவின் இவா கார்லோவிக்கை எதிர்கொண்டார். இதில் புயல்வேக சர்வீஸ்களால் மிரட்டிய பெடரர் முதல் செட்டை 6-3 என எளிதாக வென்றார்.

ஆனால், அடுத்தடுத்த செட்களில் கார்லோவிக் கடும் சவால் கொடுத்தார். என்றாலும் பெடரரின் அபார ஆட்டத்துக்கு முன்னால் கார்லோவிக்கின் திறமை எடுபடவில்லை. அடுத்த இரண்டு செட்களையும் பெடரர் 7-5, 7-6 என கைப்பற்றினார். இறுதியில் 6-3, 7-5, 7-6 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்ற காலிறுதி போட்டிகளில் ஜெர்மனியின் டாமி ஹாஸ், 7-5, 7-6, 4-6, 6-3 என செர்பியாவின் நோவக் டோகோவிச்சையும், அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் 6-3, 6-7, 7-6, 4-6, 6-4 என கடும் போராட்டத்துக்கு பின் ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட்டையும், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 7-5, 6-3, 6-2 என ஸ்பெயினின் ஜூவன் கார்லஸ் பெரரோவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

அரையிறுதியில் பெடரர்-ஹாஸ், முர்ரோ-ரோடிக் மோதுகின்றனர்.

பூபதி ஜோடி தோல்வி...

நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பக்ரைனின் மார்க் நோவல்ஸ் ஜோடி 6-7, 6-4, 6-7, 7-5, 4-6 என்ற செட்களில் தென் ஆப்ரிக்காவின் வெஸ்லே மூடி, பெல்ஜியத்தின் டிக் நார்மேன் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+