அட்டைப் படத்திலும் கலக்கிய அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை
நியூயார்க்: அமெரிக்காவின் இளம் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையும், ஒலிம்பிக் சாம்பியனுமான கேபி டக்ளஸ் எஸ்ஸன்ஸ் பத்திதரிக்கையின் உமன் ஆப் தி இயர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்தப் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் அவரது ஜொலிக்கும் படத்தை வெளியிட்டுள்ளனர்.
16 வயதேயான கேபி, கருப்பு மற்றும் தங்க நிற உடையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த இதழில் தனது வாழ்க்கை குறித்தும், ஒலிம்பிக் அனுபவம் குறித்துப் பேசியுள்ளார் கேபி.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில், தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று ஜிம்னாஸ்டிக்ஸில் தங்கம் வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் கேபி. அது முதல் கருப்பர் இனப் பெண்கள் மத்தியில் மாபெரும் ஹீரோயினாக உருவெடுத்தார் கேபி.
மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலுக்கும் மிகவும் பிடித்தமானவராக உருவெடுத்தார். இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை கேபிக்கு எஸ்ஸன்ஸ் பத்திரிக்கை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications