Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெர்சி வாங்க ஸ்பான்சர் இல்லை... சட்டை இல்லாமல் போஸ் கொடுத்து போராடிய கால்பந்து அணி!

Glovers go topless
சோமர்செட்: தங்களது அணி வீரர்களுக்கான மேல் சட்டைக்கான ஸ்பான்சர் யாரும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த இங்கிலாந்து கால்பந்து அணி ஒன்று தனது வீரர்களை சட்டை இல்லாமல் போஸ் கொடுக்க வைத்து போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் முதல் தர கால்பந்து அணிகளில் ஒன்று இயோவில் கால்பந்து கிளப் அணி. சோமர்செட்டில் இந்த அணி உள்ளது. இந்த அணிக்கு மேல்சட்டைக்கான ஸ்பான்சர் யாரும் கிடைக்கவில்லை. இதனால் அணி வீரர்கள் மனம் நொந்து போய் விட்டனர்.

இதையடுத்து தங்களது அணிக்கு சட்டை வாங்க ஸ்பான்சர் கிடைக்காமல் இருப்பதை வெளியுலகுக்குத் தெரிவிக்க முடிவு செய்த அணியின் மேலாளர் கேரி ஜான்சன், அத்தனை வீரர்களையும் சட்டை போடாமல் வெறும் பாடியுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படத்தில் மேலாளர் கேரி, உதவி பயிற்சியாளர் டெர்ரி ஸ்கிவெர்டன், இன்னொரு உதவிப் பயிற்சியாளர் மட்டுமே புல் டிரஸ்ஸில் உள்ளனர். வீரர்கள் அனைவரும் டிரவுசர் மட்டும் போட்டு சட்டைஇல்லாமல் வெறும் உடலுடன் காணப்படுகின்றனர்.

தற்போது இந்த விவகாரம் அங்கு சூட்டைக் கிளப்பியதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் சட்டை வாங்க எங்க கிட்ட வாங்க என்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்னவாம்.

நல்லவேளை ஜட்டி வாங்க ஆளில்லையேன்னு டொம்மணக்கா போஸ் கொடுக்காம போனாங்களே...!

Story first published: Wednesday, August 8, 2012, 12:22 [IST]
Other articles published on Aug 8, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+