Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் ஒருஅசிங்கம் பிடிச்ச பவுலருங்க.. ஸ்டெயின் போடும் போடு!

மும்பை: பீல்டில் நான் நல்லவனாக இருக்க விரும்புவதில்லை. மாறாக அசிங்கம் பி்டித்த, ஆக்ரோஷமான பந்து வீச்சாளராக என்னை வெளிக்காட்டவே விரும்புகிறேன் என்று தடாலடியாக கூறியுள்ளார் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின்.

ஐபிஎல் போட்டிகளில் அத்தனை வீரர்களுக்கும் பெரும் அபாயகரமான பந்து வீச்சாளராக திகழ்கிறார் ஸ்டெயின். இவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தற்போது இடம் பெற்று ஆடிவருகிறார். விக்கெட் எடுக்கிறாரோ இல்லையோ ரன் கொடுக்காமல் டென்ஷன் ஏற்படுத்துகிறார் ஸ்டெயின்.

இந்த நிலையில் தன்னைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் ஸ்டெயின். அதைப் படித்தால் யாருக்குமே கடும் கோபம்தான் வரும். அப்படி ஒரு ஆவேசமான பேச்சு அது.. இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்தால் தனது போர்க்குணத்தைக் காண்பார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.

ஸ்டெயினின் பேச்சிலிருந்து சில துளிகள்...

வேகம் இல்லாட்டிஎப்பூடி

வேகம் இல்லாட்டிஎப்பூடி

ஒரு வேகப் பந்து வீச்சாளர் என்றால் ஆவேசமும், ஆக்ரோஷமும் இருந்தாக வேண்டும். ஸ்டைலாக இருக்க முடியாது.வேகம் இல்லாமல் எப்படி வேகப் பந்து வீச்சாளராக இருக்க முடியும்.

கிரிக்கெட்டை நேசிக்கிறேன்... ஆனா அசிங்கமானவன்

கிரிக்கெட்டை நேசிக்கிறேன்... ஆனா அசிங்கமானவன்

நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். அதேசமயம், என்னை அழகான பந்து வீச்சாளராக நான் காட்டிக்கொள்ள மாட்டேன். ஆவேசமும், அசிங்கமும் பிடித்த பந்து வீச்சாளராகவே நான் இருக்க விரும்புகிறேன்.

வார்னேவைப் பார்த்து வந்தவன் நான்

வார்னேவைப் பார்த்து வந்தவன் நான்

நான் ஷான் வார்னே போன்ற பந்துவீச்சாளர்களைப் பார்த்து வளர்ந்தவன், வந்தவன். ஆவேசத்துக்குப் பெயர் போனவர் வார்னே. அவரது பந்தை யாராவது பவுண்டரிக்கு அடித்து வி்ட்டால் கோபம் வரும் அவருக்கு. நானும் அப்படியே.

மோசமான எதிரி

மோசமான எதிரி

என்னைப் பொறுத்தவரை நான் யாருக்கு பந்து வீசுகிறேனோ அவரைப் பற்றிக் கவலைப்படவே மாட்டேன்.என்னைப் பார்த்தால் அவர்களுக்கு நம்பர் ஒன் எதிரி போல தெரிவேன். அப்படித்தான் இருக்க வேண்டும்.

அங்க வாங்க வச்சுக்கிறேன்...

அங்க வாங்க வச்சுக்கிறேன்...

இந்தியஅணி தென் ஆப்பிரிக்கா வரவுள்ளது. அப்போது எனது வேகம் நிச்சயம் அவர்களைப் பயமுறுத்தும். அன்பாக நான் இருக்க மாட்டேன். ஆவேசமாகத்தான் எனது பந்துகள் பறக்கும். அதற்குத் தயாராக வருமாறு இந்திய வீரர்களை எச்சரிக்க விரும்புகிறேன் என்று அதிரடியாக பேசியுள்ளார் ஸ்டெயின்.

அயய்ய்ய்ய்யே...இப்பவே பயந்து வருதே ஸ்டெயின் கண்ணு....

Story first published: Wednesday, May 15, 2013, 14:38 [IST]
Other articles published on May 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+