Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகவே முடியாது: சீனிவாசன் திட்டவட்டம்

Srinivasan
மும்பை: குருநாத் கைது செய்யபட்டிருப்பதாலேயே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகவே முடியாது என்று என். சீனிவாசன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியும் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் பெட்டிங் புகாரில் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சீனிவாசன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஒரு குழு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று குருநாத்தை சந்திப்பதற்காக மும்பை சென்றார் சீனிவாசன்.

மும்பையில் செய்தியாளர்கள் சீனிவாசனிடம் பதவி விலகுவது பற்றி கேள்வி எழுப்பினர் .இதற்குப் பதிலளித்த சீனிவாசன், என்னை பதவி விலக வேண்டும் என்று கோருபவர்களுக்கு நான் கூறிக் கொள்ளும் ஒரே பதில் "பதவி விலகவே முடியாது" என்பதுதான். நான் எந்த தவறும் செய்யவில்லையே.. சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இதனிடையே மும்பை நீதிமன்றத்தில் குருநாத் மெய்யப்பன் இன்று பகலில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் மும்பை போலீசார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

Story first published: Saturday, May 25, 2013, 14:57 [IST]
Other articles published on May 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+