Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மழை வந்தது.. இந்தியாவுக்கு சாதனை படைக்க வாய்ப்பளித்து....!

எட்பாஸ்டன்: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வென்று புதிய சாதனை படைத்துள்ளது இந்தியா.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவை இதுவரை ஒரு முறை கூட பாகிஸ்தான் வென்றதில்லை. ஒரு வரலாறாக இருக்கிறது.

அதேபோல சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட நாம் பாகிஸ்தானை வென்றதில்லை.

ஆனால் அதை முதல் முறையாக நேற்று முறியடித்து புதிய வரலாறு படைத்து விட்டது இந்தியா.

எட்பாஸ்டன் மோதல்

எட்பாஸ்டன் மோதல்

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று கடைசி லீக் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இந்தப் போட்டியால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல பாகிஸ்தானுக்கு ஜெயித்தாலும் புண்ணியமில்லை என்ற நிலை.

இடை இடையே மழை

இடை இடையே மழை

இந்தப் போட்டியில் மழை குறுக்கிடும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படியே மழை வந்தது.

முதலில் ஆடி 165ல் சுருண்ட பாகிஸ்தான்

முதலில் ஆடி 165ல் சுருண்ட பாகிஸ்தான்

மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக சுருங்கியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 39.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ரன்களில் சுருண்டு போனது.

தவான் அபாரம்

தவான் அபாரம்

அடுத்து ஆடிய இந்தியாவுக்கு தீப்பொறி ஷிகர் தவான் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். 48 பந்துகளைச் சந்தித்த அவர் 41 ரன்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக ரோஹித் சர்மாவும் சிறப்பாக ஆடினார். இருவரும் இணைந்து 58 ரன்களைச் சேர்த்தனர்.

4 முறை நாஸ்தியாக்கிய மழை

4 முறை நாஸ்தியாக்கிய மழை

போட்டியின்போது 4 முறை மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி மேலும் சுருங்கியது. இந்தியாவுக்கு கடைசியாக 22 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடைசியில் கதையை முடித்த கோஹ்லி

கடைசியில் கதையை முடித்த கோஹ்லி

போட்டியை சிறப்பாக முடிக்கும் பொறுப்பு திணேஷ் கார்த்திக், விராத் கோஹ்லிக்கு வந்தது. அவர்களும் சிறப்பாக ஆடி போட்டியை வெற்றியில்முடித்தனர்.

22 ரன்களைக் குவித்த கோஹ்லி

22 ரன்களைக் குவித்த கோஹ்லி

கோஹ்லி 24 பந்துகளைச் சந்தித்து 22 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். திணேஷ் கார்த்திக் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சயீத் அஜ்மல் பந்தில் பவுண்டரி அஏடித்து போட்டியை முடித்தார் கோஹ்லி.

பி பிரிவில் அரை இறுதிக்கு அணிகள் ரெடி

பி பிரிவில் அரை இறுதிக்கு அணிகள் ரெடி

பி பிரிவிலிருந்து அரை இறுதிக்கு இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் தகுதி பெற்றுள்ளன.

ஏ பிரிவில் தொடரும் குழப்பம்

ஏ பிரிவில் தொடரும் குழப்பம்

ஏ பிரிவைப் பொறுத்தவரை இன்னும் அரை இறுதிக்கான அணிகள் எவை என்பது தெளிவாகவில்லை.

Story first published: Sunday, June 16, 2013, 12:24 [IST]
Other articles published on Jun 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+