Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு 2வது இடம்; ஐசிசி தர வரிசையில் அசத்தல்

கொழும்பு:ஐசிசி தரவரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று மெல்போர்னில் நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 225 ரன்கள் எடுத்தது. கேப்டன் மைக்கேல் கிளார்க் 98 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து 48.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வென்றது. எலியட் அவுட்டாகாமல் 61 ரன்கள் எடுத்தார். இது ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடர்ச்சியாக சந்திக்கும் 5வது தோல்வி. இதனால் அந்த அணிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையை அதன் சொந்த மண்ணில் 4-0 என வீழ்த்தி, தொடர்ந்து 9 வெற்றிகளை பெற்ற இந்தியா ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா
மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

இந்திய அணி 8ம் தேதி நடக்கும் இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் சூப்பர் வெற்றி பெற்றால் முதலிடத்தை பிடிக்கலாம்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:23 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+