Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரித்திரம் பேசும் இந்திய கிரிக்கெட் அணியின் 'தாயக' தோல்விகள்

மும்பை: பிட்ச் சரியில்லை.. பேட்டு சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியை கதற வைத்திருக்கிறது இங்கிலாந்து. தொடர்ச்சியாக அடுத்தடுத்த டெஸ்ட்களில் படுதோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. இதேபோல் இந்திய மண்ணில் இந்தியா படுகேவலமாக தோற்ற போட்டிகளும் இருக்கின்றன. அனேகமாக இதை நினைத்துக் கொண்டு டோணி ஆறுதல் அடையலாம்..

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் (1958)

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் (1958)

தற்போது படுதோல்வியை சந்தித்திருக்கும் கொல்கத்தா ஈடன் மைதானத்தில்தான் 1958 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளிடம் இதைவிட கேவலமாகத் தோல்வியை சந்தித்தது இந்தியா. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 614 ரன்களைக் குவித்தது. மே.இந்திய தீவு அணியின் ரோகன் பிகன்ஹாய்,256 ரன்களைக் குவித்திருந்தார். அதுவும் 400 நிமிடங்களில் 42 பவுண்டரிகளை விளாசியிருந்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய எடுத்த ரன்கள் எத்தனை தெரியுமா? வெறும் 124 ரன்கள்தான்! பின்னர் பாலோ ஆனில் 2-வது இன்னிங்சில் விளையாடியும் கூட இந்தியாவால் 154 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. வேறு வழியே இல்லாமல் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது மேற்கிந்திய தீவுகள்! இதுதான் இந்தியாவின் 'வரலாறு' பேசும் படுதோல்வி!

இதற்கு முன்னர் 1949-ல் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 193 ரன்கள் தோற்ற கதை இருக்கிறது

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் (1949)

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் (1949)

சென்னை கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் இருந்த சென்னை ஸ்டேடியத்தில் 1949ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதின. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 582 ரன்களைக் குவித்தது. இந்திய அணியோ 245 ரன்கள் வை எடுத்தது. பாலோ ஆனில் தொடர்ந்து ஆடிய இந்திய அணி எடுத்த ரன்கள் 144 மட்டுமே!. இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் மற்றும் 193 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது,

ஒரு இன்னிங்ஸ் மற்றும் 127 ரன்களில் தோற்ற போட்டியை அடுத்து பார்க்கலாம்

இந்தியா- ஆஸ்திரேலியா (1959)

இந்தியா- ஆஸ்திரேலியா (1959)

கொல்கத்தாவின் பெரோஷா ஸ்டேடியத்தில் 1959ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 135 ரன்கள்தான் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி, 468 ரன்களைக் குவித்தது. பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணியால் 206 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 127 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது 'பாரதம்'

ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற கதையை தொடர்ந்து பார்க்கலாம்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா (2008)

இந்தியா- தென் ஆப்பிரிக்கா (2008)

குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் வெறும் 76 மட்டுமே! அப்போது கேப்டன் கங்குலி! அவர் டக் அவுட்! இதற்கு பதிலடியாக தென் ஆப்பிரிக்கா அணி எடுத்தது 494 ரன்கள்! 2-வது இன்னிங்சில் கொஞ்சம் நிதானமாக ஆடி 328 ரன்கள் வரை சென்றது இந்திய அணி! ஆனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் சரித்திரம் பேசக் கூடிய தோல்வியை எழுதியது இந்தியா.

ஒரு இன்னிங்ஸ் 83 ரன்களில் தோற்ற போட்டி....

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் (1983)

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் (1983)

கான்பூரில் 1983-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் முதலில் பேட்டிங் செய்தது. 454 ரன்களை அந்த அணி எடுத்தது. இந்திய அணியோ 207 ரன்களைத்தான் எடுத்தது. பின்னர் பாலோ ஆனில் ஆடியபோதும் 164 ரன்களையே எடுக்க முடிந்தது.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.!

Story first published: Monday, December 10, 2012, 10:31 [IST]
Other articles published on Dec 10, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+