டெல்லி: இந்தியா, தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில், தொடர் நாயகன் விருதைப் பெறும் வீரருக்கு டாடா நிறுவனத்தின் புதிய காரான, சுமோ கிராண்ட் பரிசாக அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் கார் வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், இந்திய, தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
தொடர் நாயகன் விருதைப் பெறும் வீரருக்கு, டாட்டா மோட்டார்ஸின் புதிய வகை காரான டாடா சுமோ கிராண்ட் கார் பரிசாக அளிக்கப்படும் என்றார்.
இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. அடுத்த போட்டி அகமதாபாத்தில் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரையும், கான்பூரில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.