For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீண்டும் பாலாஜி - தொடரை வெல்லுமா இந்தியா?: நாளை மூன்றாவது போட்டி

By Staff

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை கொழும்புவில் நடக்கிறது. இப்போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக முனாப் படேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் பாலாஜி அணியில் இடம்பிடிக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டொன்டி-20ல் போட்டியில் விளையாட இருக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று இலங்கை சென்றது.

முதல் இரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி தொடரில் 2-0 என்ற முன்னிலையில் இருக்கிறது. மூன்றாவது போட்டி நாளை கொழும்புவில் நடக்கவிருக்கிறது.

காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்காத முனாப் படேல் இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது காயம் குணமடைய குறைந்தது 10 நாட்கள் வரை தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் இன்று நாடு திரும்பி, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் பாலாஜி இடம்பிடித்துள்ளார்.

சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் அணியில் இடம்பிடித்துள்ள பாலாஜி இன்று இரவு இலங்கை செல்கிறார்.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போதும் கொஞ்சம் தடுமாறியது. சச்சினுக்கு இரண்டு போட்டிகளிலும் அம்பயர்கள் தவறான தீர்ப்பு கொடுத்தது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. யுவராஜ், ஷேவாக் சிறப்பாக விளையாடுகின்றனர்.

முக்கிய ஸ்பின் பவுலர்கள் இல்லாத நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக பொறுப்புடன் விளையாடி வருகின்றனர். இஷாந்த் கடைசி கட்டத்தில் சூப்பராக பந்துவீசி வருகிறார்.

டோணி கூறுகையில், இரண்டு வெற்றிகளால் ரிலாக்சாகி விட முடியாது. இன்னும் தொடரை கைப்பற்றவில்லை. அதற்கு அனைத்து வீரர்களும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார் டோணி.

முரளிதரன் தற்போது ஒரு நாள் போட்டிகளில் 501 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் நாளை கூடுதலாக ஒரு விக்கெட் வீழ்த்தினால் அதிக விக்கெட் எடுத்தவர்கள் வரிசையில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரத்துடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

இலங்கை கேப்டன் ஜெயவர்தனா கூறுகையில், இரண்டாவது போட்டியில் தேவையில்லாமல் சில ரன்களை விட்டு்க்கொடுத்தோம். தவறுகளை குறைத்து கொண்டு, அடுத்த போட்டிகளில் எழுச்சி காண்போம் என்றார் ஜெயவர்தனா.

Story first published: Wednesday, December 7, 2011, 18:23 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+