Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'வைஸ் கேப்டன்' ஆனார் சஞ்சு சாம்சன்!

மும்பை: ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய கேரளத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் முதல் முறையாக இடம் கிடைத்துள்ளது. அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் துணை கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏசிசி எர்ஜிங் டீம்ஸ் கோப்பைக்கான 23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. இதில் கேப்டனாக மும்பையின் சூர்ய குமார் யாதவ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இலங்கை பயணத்துக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

India Under-19, Under-23 squads announced

19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக விஜய் சோல் நியமிக்கப்பட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன், ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினார். தனது கீப்பிங், பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்தார். ஸ்ரீசாந்த்தால் ஏற்பட்ட அவமானம் இவரால் தீர்ந்தது என்று கேரளத்தினரும் பெருமிதம் கொண்டனர்.

இந்த நிலையில் முதல் முறையாக சஞ்சுவுக்கு இந்திய அணி ஒன்றில்இடம் கிடைத்துள்ளது.

எமர்ஜிங் அணிகளுக்கான போட்டி ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை இப்போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியாவுடன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் இடம் பெற்றுள்ளன.

இலங்கைக்கான பயணம் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும்.

Story first published: Thursday, July 11, 2013, 13:43 [IST]
Other articles published on Jul 11, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+