Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக்கிற்கு 'மவுசு' இல்லை-காலியாக கிடக்கும் மைதானம்

Indian fans not interesed in Champions League
டெல்லி: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மைதானம் பார்வையாளர்கள் இல்லாமல் காலியாக கிடப்பதால் போட்டி நிர்வாகம் பாஸ் கொடுத்து ரசிகர்களை வரவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் 2007ல் நடந்த டுவென்டி-20 உலக கோப்பை தொடரை இந்தியா வென்றதை அடுத்து அப்போட்டி வெகு பிரபலமானது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் டுவென்டி-20 தொடரை துவக்கியது.

கடந்த 2008ல் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பல வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். சுவரஸ்யமாக இருந்த இப்போட்டிக்கு தொலைகாட்டி டிஆர்பி ரேட்டிங் 3.29 ஆக இருந்தது.

இதையடுத்து ஐபிஎல் அமைப்பு அடுத்த ஆண்டும் தொடரை நடத்த தி்ட்டமிட்டது. அந்த நேரம் பார்த்து மும்பை தாக்குதல் சம்பவம் நடந்ததை அடுத்து பாதுகாப்பு கருதி தொடர் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதனால் டிஆர்பி ரேட்டிங் 2.97 ஆக குறைந்தது. ஆனாலும், நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால், தற்போது பெங்களூர், டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் அதன் டிஆர்பி ரேட்டிங்கும் 0.74 ஆக இருக்கிறது.

ஆனால், தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் டிஆர்பி ரேட்டிங் 1.1 என்ற அளவில் இதை விட அதிகமுள்ளது. இது போன்ற டுவென்டி-20 தொடரை விட ஒரு நாள் போட்டிகளுக்கு இன்னும் கூடுதல் வரவேற்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் நடந்த முதல் போட்டிக்கு சுமார் 40 ஆயிரம் உட்கார கூடிய பெரோஷா கோட்லா மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

டிக்கெட் விலை ரூ. 100 தான் என்ற போதும் யாரும் வராததால் போட்டி நிர்வாகம் ஏமாற்றமடைந்துள்ளது. இருக்கைகள் காலியாக கிடப்பதால் மானம் போய்விட கூடாது என்பதற்காக நிர்வாகம் பாஸ் கொடுத்து ரசிகர்களை வரவழைத்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சச்சின், டோணி, யுவராஜ் போன்ற நட்சத்திரங்கள் இத்தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் விளையாடும் 12 அணிகளில் 3 தான் இந்தியாவை சேர்ந்தது. அவை மூன்றில் இருக்கும் இந்திய நட்சத்திரங்களும் குறைவு தான்.

இது குறித்து டெல்லியில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒன்றுவிடாமல் பார்க்கும் ரசிகர் ஒருவர் கூறுகையில், ஒடாகோ வோல்ட்ஸ், வயம்பா போன்ற அணிகளின் பெயர்களை இதுவரை கேள்விபட்டதில்லை. அதிலிருக்கும் வீரர்களை பற்றியும் தெரியாது. இதனால் போட்டிகளை பார்ப்பதில்லை என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+