Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உடல்தகுதியை நிரூபித்த இந்திய மாரத்தான் வீரர் ராம் சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி

Ram Singh Yadav
டெல்லி: லண்டன் ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் பங்கேற்க உடல்தகுதியை நிரூபித்த இந்திய மாரத்தான் வீரர் ராம் சிங் யாதவ், இந்திய தடகள சங்கத்திடம் அனுமதி பெற்றுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 13 விளையாட்டுகளில் தொடர்புடைய இந்தியாவை சேர்ந்த 81 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பல இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உடல்தகுதியை நிரூபிக்க தவறியதால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் இந்திய தடகள சங்கத்தின் உடல்தகுதி போட்டி நேற்று கோவையில் நடைபெற்றது. இதில் இந்திய மாரத்தான் ஓட்டப்பந்தயம் வீரர் ராம் சிங் யாதவ்வின் உடல்தகுதி பரிசோதிக்கப்பட்டது.

அப்போது 10 கி.மீ ஓட்ட தூரத்தை 32 நிமிடம் 30 வினாடிகளில் ராம் சிங் கடந்தார். இதன்மூலம் திருப்தி அடைந்த இந்திய தடகள சங்கத்தினர், அவருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளனர்.

இது குறித்து இந்திய தடகள சங்கத்தின் செயலாளர் சி.கே.வல்சன் கூறியதாவது,

ஒலிம்பிக் போட்டிக்கான உடல்தகுதி பரிசோதனையில் ராம் சிங் யாதவ் தேர்ச்சி பெற்றுள்ளார். கோவையில் உள்ள சிந்தட்டிக் மைதானத்தில் நடைபெற்ற சோதனை போட்டியில் 10 கி.மீ தூரத்தை 32 நிமிடம் 30 வினாடிகளில் கடந்துள்ளார் எனறார்.

Story first published: Monday, July 23, 2012, 10:52 [IST]
Other articles published on Jul 23, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+