ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பதக்கம் வென்றுள்ள இந்தியர்கள் யார்? யார்?

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்கேற்பு மிக குறைந்த அளவில் தான் இருந்துள்ளது. இதனால் பதக்கங்களும் மிக குறைந்த அளவில் தான் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இதுவரை 21 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியாவிற்கு, 18 பதக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதில் நமது தேசிய போட்டியான ஹாக்கி மூலம் இந்தியாவிற்கு 11 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
இந்திய ஹாக்கி அணி:
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணிக்கு இதுவரை 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் கிடைத்துள்ளது. மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ள ஹாக்கி அணி, மீண்டும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க காத்திருக்கிறது.
கஷாபா தாதாசாகிப் ஜாதவ்: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 1952ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே மல்யுத்த வீரர் இவர். ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இவரை பாராட்டும் வகையில், டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் உள்ள மல்யுத்த மைதானத்திற்கு கே.டி.ஜாதவ் மைதானம் என்று பெயரிட்டுள்ளது.
அத்லாண்டிக் ஒலிம்பிக்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 1996 அத்லாண்டிக் ஒலிம்பிக் போட்டியில், இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சிட்னி ஒலிம்பிக்:
கடந்த 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்ற இந்திய பளுத் தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லீஸ்வரி வெண்கலப் பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
ஏதேன்ஸ் ஒலிம்பிக்:
கடந்த 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் ராஜ்யவரதன் சிங் ரத்தோர் கலந்து கொண்டு, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
பெய்ஜிங் ஒலிம்பிக்:
கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 3 போட்டிகளில் 3 பதக்கங்கள் கிடைத்தது. துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அபினவ் பிந்த்ரா, தங்கப்பதக்கம் வென்றார்.
குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் விரேந்தர் சிங் வெண்கல பதக்கம் பெற்றார். மேலும் மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் சுசில் குமார் வெண்கல பதக்கம் பெற்றார்.
இந்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் 80 வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அதிகளவிலான பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications