பரிபாஸ் ஓபன் இரட்டையர் பிரிவு: சானியா மிர்சா ஜோடி காலிறுதிக்கு தகுதி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா, மிர்சா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி, சுவிட்சர்லாந்தின் பஜின்ஸ்கி, இத்தாலியின் பிரியான்டி ஜோடியை எதிர்த்து மோதியது.
இந்திய-ரஷ்ய ஜோடி சிறப்பாக விளையாடி 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது. ஆனால் 2வது செட்டில் சற்று தடுமாறியதால், 3-6 என்ற கணக்கில் சுவிஸ்-இத்தாலி ஜோடியிடம் தோல்வி அடைந்தது. அதன்பிறகு 3வது சுற்றில் கடும் போராட்டத்திற்கு பிறகு 10-2 என்ற கணக்கில் இந்திய-ரஷ்ய ஜோடி வெற்றிப் பெற்றது.
போட்டியின் முடிவில் இந்திய-ரஷ்ய ஜோடி 6-1, 3-6, 10-2 என்ற செட்களில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் இந்திய-ரஷ்ய ஜோடி காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.
முன்னதாக ஓற்றையர் பிரிவில் உலக டென்னிஸ் தரவரிசையில் 26வது இடத்தில் உள்ள அனபெல் மெடினாவிடம், சானியா மிர்சா தோல்வியை தழுவினார். இதனால் பெண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் இருந்து சானியா வெளியேறினார்.
Story first published: Tuesday, March 13, 2012, 11:31 [IST]
Other articles published on Mar 13, 2012


Click it and Unblock the Notifications