Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2020 ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்தம் நீக்கம்... இந்தியாவின் கனவு தகர்கிறது!

International Olympic Committee drops wrestling from 2020 Games!
லாசானே: 2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலிருந்து மல்யுத்தத்தை நீக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டுள்ளது. அதற்குப்பதிலாக, 5 போட்டிகளை உள்ளடக்கிய மாடர்ன் பெண்டலன் போட்டியை சேர்க்கவும் ஐஓசி திட்டமிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் தற்போது இடம் பெற்றுள்ள 26 வகை விளையாட்டுகளில் இருந்து ஒன்றை நீக்குவது பற்றியும், புதிதாக வேறு ஒரு விளையாட்டை இடம் பெறச் செய்வது குறித்தும் இந்த ஆலோசிக்கப்பட்டது.

வாள்வீச்சு, குதிரையேற்றம், நீச்சல், ஓட்டம் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகிய 5 விளையாட்டுகள் அடங்கிய மாடர்ன் பென்டத்லான் போட்டி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மல்யுத்தம் நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பின்னடைவு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவு இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவு இந்தியாவின் பதக்க வேட்டைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது.

மல்யுத்த வரலாறு

ஏதன்ஸ் நகரில்1896ம் ஆண்டு தொடங்கிய நவீன ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்ற பெருமை வாய்ந்தது மல்யுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

344 இந்திய மல்யுத்த வீர்ர்கள்

லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் 344 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பிரீஸ்டைல் (11 பதக்கம்) மற்றும் கிரெகோ ரோமன் பிரிவில் (7 பதக்கம்) களமிறங்கினர்.

2020 ஒலிம்பிக்கில் இடம் பெறுவதற்காக பேஸ்பால்/ சாப்ட் பால், மல்யுத்தம், கராத்தே, ஸ்குவாஷ், ரோலர் விளையாட்டு, மலையேற்றம், வேக்போர்டிங், வுஷு ஆகிய விளையாட்டுகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட உள்ளது.

வெறும் பரிந்துரைதான்

மல்யுத்த போட்டியை நீக்குவது தொடர்பாக செயற்குழு பரிந்துரை தான் செய்துள்ளது என்றும், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித்தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறியுள்ளார்.

இறுதி அறிவிப்பு

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மே மாதம் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, செப்டம்பரில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் நடக்கும் கூட்டத்தில் இறுதி அறிவிப்பு வெளியாகும்.

இந்திய வீரர்கள் எதிர்ப்பு

ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்தத்தை நீக்கும் திட்டத்தை, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மாற்றிக்கொள்ளும் என இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் 4 பதக்கங்களை வென்றுள்ளனர். அதில் சுஷில் குமார் மட்டும் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

Story first published: Wednesday, February 13, 2013, 10:55 [IST]
Other articles published on Feb 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+