For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா மீண்டும் சாம்பியனானது!!

By Mathi
Irani Cup: It's eight in a row for Rest of India
மும்பை: மும்பைக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.

ரஞ்சி சாம்பியனான மும்பை அணிக்கும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 6-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆப் இந்தியா 526 ரன்களும், மும்பை 409 ரன்களும் குவித்தன. 2-வது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆப் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளில் 5 விக்கெட்டுக்கு 389 ரன்கள் சேர்த்து ரெஸ்ட் ஆப் இந்தியா டிக்ளேர் செய்தது. அம்பத்தி ராயுடு 156 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா ஆனது. இதனால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி இரானி கோப்பையைக் கைப்பற்றியது.

53 ஆண்டு கால இரானி கோப்பை போட்டிகளில் ரெஸ்ட் ஆப் இந்தியா 25-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 2006-07-ல் இருந்து தொடர்ச்சியாக 8 முறையாக கோப்பையை தக்க வைத்திருக்கிறது.

Story first published: Monday, February 11, 2013, 9:25 [IST]
Other articles published on Feb 11, 2013
English summary
Rest of India once again won the Irani Cup tie, by virtue of a huge 117-run first-innings lead over Mumbai, in a match which petered out to a drab draw at the Wankhede Stadium on Sunday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+