Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வு பெறுகிறார் ரஷ்யாவின் போல்வால்ட் வீராங்கனை இசின்பயேவா!

மாஸ்கோர்: ரஷிய போல்வால்ட் வீராங்கனை இசின்பயேவா மாஸ்கோவில் அடுத்த மாதம் நடைபெறும் உலக தடகள போட்டிகளுடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

உலக அளவில் போல்வால்ட் எனப்படும் கம்பை ஊன்றி தாண்டும் விளையாட்டில் ராணியாக வலம் வருபவர் ரஷியாவின் யுலினா இசின்பயேவா. 31 வயதான இவர் படைத்த சாதனைகள் ஏராளம்!

2004,2008-ல் தங்கப் பதக்கம்

2004,2008-ல் தங்கப் பதக்கம்

2004 மற்றும் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை தட்டிச் சென்றவர்.

28 முறை சாதனை தூதரம் மாற்றம்

28 முறை சாதனை தூதரம் மாற்றம்

பெண்கள் போல்வால்ட்டில் 28 முறை உலக சாதனை தூரத்தை மாற்றி சரித்திரம் படைத்திருக்கிறார்.

5 மீட்டர் உயரம் தாண்டியவர்

5 மீட்டர் உயரம் தாண்டியவர்

உலகிலேயே 5 மீட்டர் உயரம் தாண்டிய முதல் வீராங்கனை என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் இசின்பயேவவா. அவர் தாண்டிய உயரம் 5.06 மீட்டர் உயரம். இதுவே இன்றுவரை உலக சாதனை.

2012-ல் தடுமாற்றம்

2012-ல் தடுமாற்றம்

சரித்திரம் படைத்த இசின்பயேவவா 2012- லண்டன் ஒலிம்பிக்கில் தடுமாறி வெண்கலத்தையே வென்றார். இதுவே அவருக்கு ஏமாற்றமாகிவிட்டது. ஓய்வு பெற முடிவு எடுத்ததற்கும் காரணமாகிவிட்டது.

உலக தடகளப் போட்டிகளுடன் ஓய்வு

உலக தடகளப் போட்டிகளுடன் ஓய்வு

இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற இசின்பயேவா மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாஸ்கோவில் அடுத்த மாதம் உலக தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது. அத்துடன் எனது விளையாட்டு வாழ்க்கை நிறைவடைகிறது. இப்போட்டியில் முதல் பட்டம் வெல்வேன் என்றார்.

முதலும் கடைசியும்

முதலும் கடைசியும்

மாஸ்கோவில்தான் இசின்பயேவா முதல் பட்டத்தை வென்றார். அதே நகரிலேயே இறுதிப் பட்டத்தையும் வெல்லப் போவதாக கூறியுள்ளார்.

Story first published: Thursday, July 25, 2013, 13:14 [IST]
Other articles published on Jul 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+