Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் ரஞ்சன் சோதிக்கு வெள்ளிப் பதக்கம்

Ronjan Sodhi
சுலோவேனியா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ரஞ்சன் சோதி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சுலோவேனியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் ரஞ்சன் சோதி, டபுள் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். கடந்த இரு உலக கோப்பை போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ரஞ்சன் சோதி, இந்த முறையும் தங்கப்பதக்கம் வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஞ்சன் சோதி 191 புள்ளிகளை பெற்றார். இதன்மூலம் வெள்ளிப்பதக்கம் தான் கிடைத்தது. அமெரிக்க வீரர் ஜோஸ்வா ரிச்மான்ட் தங்கப்பதக்கம் வென்றார்.

முன்னதாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ரஞ்சன் சோதி 188 புள்ளிகள் பெற்று, இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். உலக கோப்பையில் பெற்ற 191 புள்ளிகளை லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ரஞ்சன் சோதி பெற்றிருந்தால், தங்கப்பதக்கம் வென்றிருக்கலாம்.

உலக கோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரஞ்சன் சோதியை, இந்திய தேசிய ரைபிள் கூட்டமைப்பின் தலைவர் ரனீந்தர்சிங் பாராட்டினார். மேலும் எதிர்காலத்தில் சோதி பல வெற்றிகளை பெறுவார் வாழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 3 உலக கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை ரஞ்சன் சோதி பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, September 26, 2012, 12:28 [IST]
Other articles published on Sep 26, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+