Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

''நாங்களே எழுதி நாங்களே நடித்த நாடகம் சூப்பர்''... டோணி பெருமிதம்

கார்டிப்: இலங்கைக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி சிறப்பானது. அருமையான திரைக்கதையுடன் கூடிய திரைப்படம் போல இது அமைந்துள்ளது என்று இந்திய கேப்டன் டோணி கூறியுள்ளார்.

கார்டிப் மைதானத்தில் நேற்று இலங்கைக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் இந்தியா மோதியது. அதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இலங்கையை பேட்டிங்கிலும் சரி பந்து வீச்சிலும் சரி எழுந்திருக்கவே விடாமல் செய்து விட்டது இந்தியா. ரசிகர்கள் இந்த வெற்றியால் குஷியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வெற்றி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் டோணி.

அருமையான ஸ்கிரிப்ட்

அருமையான ஸ்கிரிப்ட்

இது அருமையான திரைக்கதையுடன் கூடிய திரைப்படம் போல அமைந்து விட்டது. நல்ல வெற்றி.

பந்து வீச்சு அருமை

பந்து வீச்சு அருமை

நமது பந்து வீச்சாளர்கள் நமக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். தில்ஷன் ஆட்டமிழந்ததே இலங்கைக்கு பெரிய பலவீனமாக அமைந்தது.

ஸ்பின்னர்கள் சூப்பரப்பு

ஸ்பின்னர்கள் சூப்பரப்பு

நமது பந்து வீச்சாளர்கள் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர்.

பந்தும் ஒத்துழைத்தது

பந்தும் ஒத்துழைத்தது

ஒரு அணிக்கு நல்ல பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டியது அவசியமானது. பந்தும் கூட எங்களுக்கு நல்லவிதத்தில் ஒத்துழைத்தது.

நானே பந்து வீச வந்தது ஏன்

நானே பந்து வீச வந்தது ஏன்

நேற்றைய ஆட்டத்தில் சில வேகப் பந்து வீச்சாளர்களை கடைசி நேரத்தில் வீச வைக்க திட்டமிட்டேன். இதனால்தான் இடையில் நான் பந்து வீசினேன். திணேஷ் கார்த்திக் இருந்ததால் கீப்பிங் பிரச்சினை ஏற்படவில்லை. முதல் ஓவரில் மோசமாக வீசினால் நிறுத்தலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நல்லவேளையாக நன்றாக வீசியதால் தொடர்ந்து வீசினேன்.

இங்கிலாந்து நல்ல அணிதான்

இங்கிலாந்து நல்ல அணிதான்

இங்கிலாந்து நல்ல அணிதான். அவர்களுடன் கடந்த 2 ஆண்டுகளில் பல போட்டிகளில் ஆடியுள்ளோம். இறுதிப் போட்டியை எதிர்பார்த்திருக்கிறோம் என்றார் டோணி.

Story first published: Friday, June 21, 2013, 13:26 [IST]
Other articles published on Jun 21, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+