Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏரோபிளேன் வேணும், சொகுசு ரூம் வேணும்.. ஜெனீபர் போட்ட கண்டிஷன்கள், நிராகரித்த ஐபிஎல்!

லாஸ் ஏஞ்செலஸ்: ஐபிஎல் தொடக்க விழாவுக்கு ஏன் ஜெனீபர் லோபஸ் வரவில்லை என்று இப்போது காரணம் தெரிய வந்துள்ளது. மிகப் பெரிய அளவில் ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்து, இதையெல்லாம் கொடுத்தால் வாரேன் என்று லோபஸ் சொல்ல, அதைப் படித்துக் கடுப்பான ஐபிஎல் நிர்வாகம் நீங்க வரவே வேண்டாம் என்று சொல்லி விட்டதாம்.

ஐபிஎல் 6வது போட்டித் தொடர் ஏப்ரல் 3ம் தேதி தொடங்குகிறது. கிராமங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களின்போது ஆண்டுக்கு ஆண்டு ஏதாவது ஒரு புது டான்ஸ் கோஷ்டி அல்லது கரகாட்டக் கோஷ்டியைக் கூட்டி வந்து ஆட விடுவார்களே அதே போல இந்த ஆண்டு தொடக்க விழாவில் ஜெனீபர் லோபஸைக் கூட்டி வந்து ஆட விடலாம் என திட்டமிட்டனர்.

இதையடுத்து லோபஸையும் தொடர்பு கொண்டனர். அவரும் வர தயார்தான் என்றாராம். ஆனால் அவர் போட்ட நிபந்தனைகள்தான் ஐபிஎல் நிர்வாகத்தின் தலையை சுற்ற வைத்து விட்டதாம்.

அப்படி என்னதான் கேட்டார் லோபஸ்...

தனி ஏரோபிளேன் வேண்டும்

தனி ஏரோபிளேன் வேண்டும்

முதலில் தனக்கென தனியாக ஒரு விமானத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறினாராம் லோபஸ். இதுதொடர்பான வேண்டுகோளை லோபஸின் மேலாளர் பென்னி மெடினா ஐபிஎல் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

எல்லோருக்கும் சொகுசு அறைகள்.. ரென்ட் நீங்களே கட்டிடுங்க

எல்லோருக்கும் சொகுசு அறைகள்.. ரென்ட் நீங்களே கட்டிடுங்க

மேலும் லோபஸுடன் அவரது மிகப் பெரிய குழுவும் உடன் வரும். அவர்களுக்கு சகலவிதமான வசதிகளுடன் கூடிய சொகுசு அறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான கட்டணத்தையும் ஐபிஎல்லே ஏற்க வேண்டும் என்பது லோபஸ் தரப்பின் இன்னொரு நிபந்தனை.

கடுப்பான ஐபிஎல்

கடுப்பான ஐபிஎல்

லோபஸின் இந்த நிபந்தனைகளைக் கேட்ட ஐபிஎல் நிர்வாகம் கடும் கோபமடைந்து விட்டதாம். இப்படிப்பட்ட நிபந்தனைகள் ரொம்பவே ஓவர் என்று கூறிய ஐபிஎல் நிர்வாகிகள், நீங்க வரவே வேண்டாம் என்று லோபஸிடம் கூறி விட்டதாம்.

பாப்பு வேண்டாம்.. ரேப்பு போதும்

பாப்பு வேண்டாம்.. ரேப்பு போதும்

தற்போது பாப் பாடகி ஜெனீபருக்குல் ராப்பர் பிட்புல்லை புக் செய்துள்ளனராம்.

நல்ல சான்ஸை விட்டுட்டாரே லோபஸ்

நல்ல சான்ஸை விட்டுட்டாரே லோபஸ்

இதற்கிடையே, ஜெனீபர் லோபஸ் நல்லதொரு வாய்ப்பை நழுவ விட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா போன்ற மிகப் பெரிய ரசிகர்களைக் கொண்ட நாட்டில் லைவ் ஷோ செய்வது மிகப் பெரிய விஷயம் என்று அது கூறியுள்ளது.

சமர்த்தாக வந்த கேத்தி பெர்ரி

சமர்த்தாக வந்த கேத்தி பெர்ரி

கடந்த ஆண்டு கேத்தி பெர்ரி வந்து ஆடிப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். அவர் லோபஸ் போல குண்டக்க மண்டக்க டென்ஷன் நிபந்தனைகளைப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவரது ஆட்டம் பாட்டத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அப்படியெல்லாம் இல்லையாம்..

அப்படியெல்லாம் இல்லையாம்..

இதற்கிடையே, லோபஸ் நிபந்தன எதையும் போடவில்லை. உண்மையில் அவர் மிகவும் பிசியாக இருக்கிறார். எனவே அவராகத்தான் ஐபிஎல் தொடக்க விழாவில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்தார். அவரை ஐபிஎல் நிர்வாகம் நீக்கவில்லை என்று லோபஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Story first published: Sunday, March 31, 2013, 16:12 [IST]
Other articles published on Mar 31, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+