இந்திய பயணத்தை ரத்து செய்தார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான தாவூத் இப்ராகிம் சம்பந்தி மியான்

பாகிஸ்தான் அணியுடனான 3-வது ஒருநாள் போட்டி டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு மியான்டட் வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உறவினர் மியான்டட் என்பதால் அவருக்கு இந்தியா விசா கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கை வலுத்தது. மியான்டட்டின் மகனைத்தான் தாவூத் இப்ராகிமின் மகள் திருமணம் செய்திருக்கிறார்...அதாவது தாவூத்தின் சம்பந்திதான் மியான்டட் என்ற காரணத்தால் அவருக்கு விசா வழங்க பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் மியான்டட் தமது பயணத்தை ரத்து செய்திருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
Story first published: Friday, January 4, 2013, 17:21 [IST]
Other articles published on Jan 4, 2013


Click it and Unblock the Notifications