Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயவர்த்தனே சதம்:இலங்கை அபாரம்-நியூசி. திணறல்

காலே: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார துவக்கம் கண்டுள்ளது. ஜெயவர்தனே சதம் கடக்க முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் நேற்று காலே மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக பரனவிதானா, தில்ஷன் வந்தனர். பரனவிதானா டக் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் சங்ககரா 8 வெளியேறினார். இதையடுத்து இலங்கை 16 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்தது.

அடுத்த வந்த ஜெயவர்தனே, தில்ஷனுடன் இணைந்து அணியின் மானத்தை காத்தார். ஒரு நாள் போட்டி போல் அதிரடியாக பேட் செய்த திலஷ்ன் 1 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 72 பந்தில் 92 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மறுமுனையில் சூப்பராக பேட் செய்த ஜெயவர்தனே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26வது சதத்தை பதிவு செய்தார். இலங்கை முதல் நாள் முடிவில் 78 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனே 108, சமரவீரா 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+