மதுபான பாரில் தகராறு- கோமா நிலைக்குப் போன நியூசி. வீரர் ஜேசி ரைடருக்கு நினைவு திரும்பியது!

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசி ரைடர், எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியில் விளையாட ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்சர்ச் நகரில் மதுபான பாரில் இவரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜேசி ரைடர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளார். நினைவு திரும்பிய ஜேசி ரைடர் தமது குடும்பத்தினருடன் உரையாடியிருக்கிறார். ஆனால் தாக்குதல் சம்பவம் பற்றி அவருக்கு எந்த நினைவும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
நினைவு திரும்பியிருந்தாலும் ஜேசிரைடர் குணமடைய நீண்ட நாட்களாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Story first published: Saturday, March 30, 2013, 14:49 [IST]
Other articles published on Mar 30, 2013


Click it and Unblock the Notifications